உலக நாயகன் கமலஹாசன் நடித்து, தயாரித்த விக்ரம் படம் 500 கோடிக்கு மேல் வசூலை அள்ளினார். அதன் பிறகு இப்போது கமலின் இந்தியன் 2 படம் இப்பொழுது ஜோராக வேலை நடந்து கொண்டிருக்கிறது. மாஸ் கூட்டணியில் உருவாகி வரும் இந்த படத்திற்கு இப்பொழுது வேலைப்பாடுகள் நடந்து வருகின்றது
இந்தப் படத்தில் எல்லாமே பெரிய கைகள். உலக நாயகன் நடிப்பில் இந்தியன் 2 படத்தை லைக்கா புரொடக்ஷன்ஸ் தயாரிக்க பிரம்மாண்டத்திற்கு பெயர் சங்கர் இயக்குகிறார். இவ்வாறு ஒரு மாஸ் கூட்டணி வேலை செய்து கொண்டே இருக்கிறது.
இப்பொழுது படத்தில் பிரம்மாண்டதிற்காக ஒரு பாட்டு வைக்கப் போகிறார்களாம்.
தென் ஆப்பிரிக்கா செல்லவிருக்கிறது படக்குழு. ஏற்கனவே கமலின் அவ்வை சண்முகி படத்தில் ‘காதலா காதலா’ பாடல் எடுத்த இடத்தில் இப்பொழுது 25 வருடம் கழித்து இந்தியன் 2 படத்திற்காக இன்னொரு பாடல் எடுக்கப் போகிறார்கள்.
1996 ஆம் ஆண்டு கேஎஸ் ரவிக்குமார் இயக்கத்தில் கமலஹாசன் உடன் மீனா, நாகேஷ், ஜெமினி கணேசன் உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான அவ்வை சண்முகி திரைப்படம் சூப்பர் ஹிட் அடித்தது.
இதில் கமலஹாசன் வயதான பெண்கதாபாத்திரம் உள்ளிட்ட 2 வேடத்தில் நடித்து கலக்கி இருப்பார்.
மேலும் அவ்வை சண்முகி படத்தில் அந்தப் பாட்டு ப்ளஸ் பாயிண்ட் ஆக அமைந்தது.
கமல் தான் இந்த ஐடியாவை கொடுத்ததாக தெரிகிறது. இந்த ஐடியா சங்கருக்கும் பிடித்த போனதால் கமலஹாசன் சொன்னபடியே படக்குழுவை கூட்டிக்கொண்டு தென் ஆப்பிரிக்கா கிளம்ப முன்னேற்பாடுகள் நடைபெறுகிறது.
இந்தியன் 2 படத்தின் பெரும்பான காட்சிகள் சென்னையில் உள்ள பிரசாந்த் ஸ்டூடியோவில் எடுக்கப்பட்ட நிலையில், இப்போது கமல் கொடுத்திருக்கும் ட்ரிக்கை படத்தில் செயல்படுத்தி படத்தில் சூப்பர் ஹிட் ஆகப்போகும் பாடலை எடுக்க கிளம்புகின்றனர்.
இந்த தகவலை அறிந்த ரசிகர்களுக்கும் இந்தியன் 2 படத்தை குறித்த எதிர்பார்ப்பை எகிற வைத்திருக்கிறது.
உலகம் முழுவதும் தரமான முதல் தர வானொலி கேட்க
உங்கள் நேரத்திற்கு ஏற்றால் போல் 24 மணி நேர இசை பயணத்தில் இனைந்து இருங்கள் உங்களுக்கு பிடித்த பாடல்கள் நிகழ்ச்சிகளை கேட்டு ரசித்த படி www.Akswisstamilfm.com
https://apps.apple.com/us/app/akswiss-tamil-fm/id1607446642?platform=iphone👈👈#akswisstamilfm.
https://play.google.com/store/apps/details?id=com.zendroid.akswiss 👈👈#akswisstamilfm #skiing #akswisstamilmedia #akswisstamiltv
புதிய அறிவிப்பாளர்கள் புதிய புதிய நிகழ்ச்சிகளை கேட்டு ரசித்த படி இனைந்து மகிழுங்கள்
Post a Comment