நடிகர் கஞ்சா கருப்பின் தற்போதைய பரிதாப நிலை



 திரைப்பட தயாரிப்பில் ஈடுபட்டு நஷ்டம் ஏற்பட்டதால் சொந்த வீட்டை விற்றுவிட்டு வாடகை வீட்டில் இருப்பதாக நடிகர் கஞ்சா கருப்பு தெரிவித்துள்ளார்.

2003ஆம் ஆண்டு வெளியான பிதாமகன் படத்தின் மூலம் அறிமுகமானவர் கஞ்சா கருப்பு. அதனைத் தொடர்ந்து ராம், சண்டக்கோழி, சிவகாசி, திருப்பதி போன்ற படங்களில் நகைச்சுவை நடிகராக வலம் வந்தார்.

அதன் பின்னர் சுப்ரமணியபுரம் படத்தில் நடித்து சிறந்த நடிகராகவும் பிரபலமடைந்தார்.

2010ஆம் ஆண்டு சங்கீதா என்பவரை திருமணம் செய்துகொண்ட கஞ்சா கருப்பு, 2014ஆம் ஆண்டு 'வேல் முருகன் போர்வெல்ஸ்' என்ற படத்தை தயாரித்தார்.

அந்த படம் வெற்றி பெறாததால் அவர் பெரும் நட்டத்தை சந்தித்தார். தற்போது கஞ்சா கருப்பு வாடகை வீட்டில் குடியிருக்கிறார்.

இது குறித்து சமீபத்திய நிகழ்ச்சி ஒன்றில் பேசிய கஞ்சா கருப்பு, 'படம் தயாரித்து மாட்டிக் கொள்ளாதீர்கள் என்று எனக்கு சில ஆலோசனை கூறினார்கள்.

நான் அதை கேட்கவில்லை. படம் பாதி முடிந்தபோது தான் எனக்கு தெரிந்தது. தயாரிப்பாளர் கஞ்சா கருப்புக்கு எதையும் தாங்கும் இதயம் உண்டு என்று, நான் தயாரித்த படத்தின் இயக்குநர் மற்றவர்களிடம் கூறியுள்ளார்.

கடைசியில் நான் உழைத்து வாங்கிய காசில் வைத்திருந்த பாலா - அமீர் இல்லம் என்ற எனது சொந்த வீட்டை விற்று விட்டு, இப்போது 20 ஆயிரம் ரூபாய்க்கு வாடகை வீட்டில் இருக்கிறேன். அதைப் பற்றி கவலைப்படவில்லை' என தெரிவித்துள்ளார்.

கஞ்சா கருப்புக்கு கடந்த சில ஆண்டுகளாக சரியான படங்கள் அமையவில்லை. மேலும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அவர், பாதியிலேயே அதிலிருந்து வெளியேறினார் என்பது குறிப்பிடத்தக்கது.  

உலகம் முழுவதும் தரமான முதல் தர வானொலி கேட்க

உங்கள் நேரத்திற்கு ஏற்றால் போல் 24 மணி நேர இசை பயணத்தில் இனைந்து இருங்கள் உங்களுக்கு பிடித்த பாடல்கள் நிகழ்ச்சிகளை கேட்டு ரசித்த படி   www.Akswisstamilfm.com 

 https://apps.apple.com/us/app/akswiss-tamil-fm/id1607446642?platform=iphone👈👈#akswisstamilfm. 

  https://play.google.com/store/apps/details?id=com.zendroid.akswiss 👈👈#akswisstamilfm #skiing  #akswisstamilmedia  #akswisstamiltv

  புதிய அறிவிப்பாளர்கள் புதிய புதிய நிகழ்ச்சிகளை கேட்டு ரசித்த படி இனைந்து மகிழுங்கள்

Post a Comment

Previous Post Next Post

5

5

5

Girl in a jacket Girl in a jacket

5

5

HTML tutorial