வெண்ணிலா கபடிக்குழு படத்தின் மூலம் புகழ் அடைந்த நடிகர் மாயி சுந்தர் இன்று உயிரிழந்தார்.
வெண்ணிலா கபடிக்குழு படத்தின் மூலம் புகழ் அடைந்தவர் நடிகர் மாயி சுந்தர்(50). இவர் மாயி, துள்ளாத மனமும் துள்ளும், வெண்ணிலா கபடி குழு, குள்ள நரி கூட்டம், சிலுக்குவார் பட்டி சிங்கம், கட்டா குஸ்தி என
50 க்கும் மேற்பட்ட படங்களில் காமெடி மற்றும் குணச்சித்திர வேடங்களில் நடித்துள்ளார். இந்நிலையில், இவர் மஞ்சல் காமாலை நோயால் பாதிக்கப்பட்டு தனது சொந்த ஊரான மன்னார்குடியில் சிகிச்சை பெற்று வந்தார்.
திடீரென சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இவரது மறைவுக்கு திரையுலகத்தினர் பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர். இவரது உடலுக்கு இறுதிச் சடங்குகள் அவரது சொந்த ஊரில் நடைபெறும் என தகவல் வெளியாகியுள்ளது.
உலகம் முழுவதும் தரமான முதல் தர வானொலி கேட்க
உங்கள் நேரத்திற்கு ஏற்றால் போல் 24 மணி நேர இசை பயணத்தில் இனைந்து இருங்கள் உங்களுக்கு பிடித்த பாடல்கள் நிகழ்ச்சிகளை கேட்டு ரசித்த படி www.Akswisstamilfm.com
https://apps.apple.com/us/app/akswiss-tamil-fm/id1607446642?platform=iphone👈👈#akswisstamilfm.
https://play.google.com/store/apps/details?id=com.zendroid.akswiss 👈👈#akswisstamilfm #skiing #akswisstamilmedia #akswisstamiltv
புதிய அறிவிப்பாளர்கள் புதிய புதிய நிகழ்ச்சிகளை கேட்டு ரசித்த படி இனைந்து மகிழுங்கள்


Post a Comment