சிம்புவின் ‘பத்து தல’ திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் நடிகர் கௌதம் கார்த்திக், இப்படத்தின் புதிய அப்டேட்டை வெளியிட்டுள்ளார்.
சமீபத்தில் இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளதை படக்குழு அறிவித்திருந்த நிலையில், நடிகர் கௌதம் கார்த்திக் ‘பத்து தல’ படத்தில் தனது பகுதிகளுக்கான டப்பிங் பணிகளை முடித்துள்ளதாக புகைப்படங்களை வெளியிட்டு தனது சமூக வலைதளத்தில் உறுதிப்படுத்தியுள்ளார்.
‘சில்லுனு ஒரு காதல்’, ‘நெடுஞ்சாலை’ போன்ற படங்களை இயக்கிய ஒபலி என்.கிருஷ்ணாவின் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘பத்து தல’ திரைப்படத்தை ஸ்டூடியோ கிரீன் ஞானவேல் ராஜா தயாரிக்கிறார்.
இதில் சிம்புவுடன் கௌதம் மேனன், கௌதம் கார்த்திக், பிரியா பவானி சங்கர், கலையரசன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் இந்த படத்திற்கு இசையமைக்கிறார்.
கன்னடத்தில் 2017ஆம் ஆண்டு வெளியான ‘முஃப்தி’ திரைப்படத்தின் தமிழ் ரீமேக்காக உருவாகும் இந்த படத்தில் ஏஜிஆர் என்ற கேங்ஸ்டர் கதாபாத்திரத்தில் சிம்பு நடித்து வருகிறார்.
..
உலகம் முழுவதும் தரமான முதல் தர வானொலி கேட்க
உங்கள் நேரத்திற்கு ஏற்றால் போல் 24 மணி நேர இசை பயணத்தில் இனைந்து இருங்கள் உங்களுக்கு பிடித்த பாடல்கள் நிகழ்ச்சிகளை கேட்டு ரசித்த படி www.Akswisstamilfm.com
https://apps.apple.com/us/app/akswiss-tamil-fm/id1607446642?platform=iphone👈👈#akswisstamilfm.
https://play.google.com/store/apps/details?id=com.zendroid.akswiss 👈👈#akswisstamilfm #skiing #akswisstamilmedia #akswisstamiltv
புதிய அறிவிப்பாளர்கள் புதிய புதிய நிகழ்ச்சிகளை கேட்டு ரசித்த படி இனைந்து மகிழுங்கள்


Post a Comment