நயன்தாரா குறித்து வௌியான தகவல்

 



மாயா, இறவாக்காலம், கேம் ஓவர் ஆகிய படங்களை இயக்கியவர் அஸ்வின் சரவணன். இவர் நடிகை நயன்தாராவை முன்னணி கதாபாத்திரமாக வைத்து அடுத்து இயக்கியுள்ள படம் – கனெக்ட்.

ரெளடி பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்தில் நயன்தாராவுடன் அனுபம் கெர், சத்யராஜ் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.

 நடிகை நயன்தாராவின் பிறந்தநாளை முன்னிட்டு இந்தத் திரைப்படத்தின் டீசரை படக்குழுவினர் வெளியிட்டது குறிப்பிடத்தக்கது. 

த்ரில்லர் பாணியில் உருவாகியுள்ள இந்தப் படத்திற்கு பிருத்வி சந்திரசேகர் இசையமைத்துள்ளார்.

இத்திரைப்படம் டிசம்பர் 22ஆம் தேதி வெளியாகவுள்ளது.

இந்நிலையில், படத்தின் இயக்குநர் அஸ்வின் சரவணன் ‘இந்தப்படத்தின் கதை கரோனா காலகட்டத்தில் நடப்பது போன்று உருவாக்கப்பட்டுள்ளது. நயன்தாராவின் மகளுக்கு பேய் பிடிக்கிறது.

 ஆனால், குடும்பத்தினர் வேறுவேறு இடங்களில் உள்ளனர். இறுதியில் எப்படி பேயை விரட்டுகிறார்கள் என்பதை அதிக மெனக்கெடலுடன் படமாக்கியுள்ளோம். 

என் முந்தையை படங்களைப் போலவே பரபரப்பாக இருக்கும். 99 நிமிடங்கள் ஓடக்கூடிய இப்படத்திற்கு இடைவேளை கிடையாது’ எனத் தெரிவித்துள்ளார்.

Post a Comment

Previous Post Next Post

5

5

5

Girl in a jacket Girl in a jacket

5

5

HTML tutorial