எங்கேயும் எப்போதும்’, ‘இவன் வேற மாதிரி’, ‘வலியவன்’ படங்களை இயக்கிய இயக்குனர் எம்.சரவணன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘ராங்கி’.
லைக்கா தயாரிப்பு நிறுவனம் பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாரித்துள்ள இப்படத்தில், திரிஷா முதன்மை நாயகியாக நடித்துள்ளார்.
இந்தப் படத்தின் டீசர் கடந்த 2019இல் வெளியான நிலையில் 3 வருட இடைவேளைக்குப் பிறகு இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக், பாடல்கள் ஆகியவை சமீபத்தில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது.
இந்தநிலையில், ‘ராங்கி’ திரைப்படத்தின் டிரைலர் தற்போது வெளியாகியுள்ளது. திரிஷா ஆக்ஷன் காட்சிகளில் மிரட்டும் இந்த டிரைலர் சமூக வலைதளத்தில் வேகமாக வைரலாகி வருகிறது.
முன்னணி இயக்குநர் ஏ. ஆர். முருகதாஸ் கதை எழுதியிருக்கும் இந்த திரைப்படத்திற்கு சக்தி ஒளிப்பதிவு செய்ய, சி. சத்யா இசையமைத்திருக்கிறார். பாடல்கள் கபிலன் எழுதியுள்ளார்.
கதையின் நாயகிக்கு முக்கியத்துவம் அளித்து ஆக்ஷன் என்டர்டெய்னர் கதைக்களத்தில் தயாராகியுள்ள இப்படம், டிசம்பர் முப்பதாம் திகதியன்று உலகம் முழுவதும் வெளியாகவுள்ளது.
உலகம் முழுவதும் தரமான முதல் தர வானொலி கேட்க
உங்கள் நேரத்திற்கு ஏற்றால் போல் 24 மணி நேர இசை பயணத்தில் இனைந்து இருங்கள் உங்களுக்கு பிடித்த பாடல்கள் நிகழ்ச்சிகளை கேட்டு ரசித்த படி www.Akswisstamilfm.com
https://apps.apple.com/us/app/akswiss-tamil-fm/id1607446642?platform=iphone👈👈#akswisstamilfm.
https://play.google.com/store/apps/details?id=com.zendroid.akswiss 👈👈#akswisstamilfm #skiing #akswisstamilmedia #akswisstamiltv
புதிய அறிவிப்பாளர்கள் புதிய புதிய நிகழ்ச்சிகளை கேட்டு ரசித்த படி இனைந்து மகிழுங்கள்
Post a Comment