\ திராவிட மாடல் அரசை வழிநடத்தும் மாண்புமிகு முதலமைச்சர் M. K. Stalin அவர்களின் அமைச்சரவையில் இன்று இணைகிறேன்.
இந்தப் பொறுப்பையும் நான் சவாலாக எடுத்துக்கொண்டு, என் செயல்பாடுகள் மூலம் மக்களின் மனங்களை வெல்ல முயல்வேன்.
விமர்சனங்களைச் செயலால் எதிர்கொள்வேன். அன்பும், நன்றியும்.-உதயநிதி ஸ்டாலின்.
முதல்வர் மு.க.ஸ்டாலின் மகன் உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ. இன்று தமிழக அமைச்சராக பதவியேற்றார். சென்னை ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் உதயநிதி ஸ்டாலினுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி பதவி பிரமாணம் செய்து வைத்தார்.
2021-ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் சேப்பாக்கம் திருவல்லிக்கேணி தொகுதியில் போட்டியிட்டு அமோக வெற்றியை பெற்றார் உதயநிதி ஸ்டாலின். அப்போதே உதயநிதி அமைச்சராவார் என கூறப்பட்டது.
இருந்தபோதும் தொடர்ந்து மக்கள் பணியாற்றி வந்தார் உதயநிதி. கடந்த 19 மாதங்களாக சிறந்த எம்.எல்.ஏ.வாக செயல்பட்டு வந்தார் உதயநிதி ஸ்டாலின்.
இதனைத் தொடர்ந்து உதயநிதி ஸ்டாலின் இன்று தமிழக அமைச்சரவையில் இடம்பெற்றார்.
சென்னை ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் உதயநிதி ஸ்டாலினுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி அமைச்சராக பதவி பிரமாணம் செய்து வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் தமிழக அமைச்சர்கள், திமுக மூத்த தலைவர்கள், பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் பங்கேற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது .
உலகம் முழுவதும் தரமான முதல் தர வானொலி கேட்க
உங்கள் நேரத்திற்கு ஏற்றால் போல் 24 மணி நேர இசை பயணத்தில் இனைந்து இருங்கள் உங்களுக்கு பிடித்த பாடல்கள் நிகழ்ச்சிகளை கேட்டு ரசித்த படி மகிழுங்கள் www.Akswisstamilfm.com
https://apps.apple.com/us/app/akswiss-tamil-fm/id1607446642?platform=iphone👈👈#akswisstamilfm.
https://play.google.com/store/apps/details?id=com.zendroid.akswiss 👈👈#akswisstamilfm #skiing #akswisstamilmedia #akswisstamiltv
புதிய அறிவிப்பாளர்கள் புதிய புதிய நிகழ்ச்சிகளை கேட்டு ரசித்த படி இனைந்து மகிழுங்கள்
Post a Comment