கோலிவுட்டின் புதிய அம்மா நயன்தாரா, அக்டோபர் 9-ஆம் திகதி தனது இரட்டை குழந்தைகள் பிறந்ததில் இருந்து இன்னும் பிஸியாக இருக்கிறார்.
தனது பிஸியான ஷெட்யூல்களுக்கிடையே, மகன்களுடன் நேரம் செலவிடுவதில் அவர் மிகுந்த மகிழ்ச்சி அடைவதாக நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
வரும் நவம்பர் 18-ஆம் திகதி திகதியோடு நயன்தாராவுக்கு 38 வயதாகிறது. இதையடுத்து அவர் இந்த முறை வித்தியாசமான கொண்டாட்டத்தைத் தேர்ந்தெடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது. கடந்த சில வருடங்களாக நயன், தனது பிறந்தநாளை விக்னேஷ் சிவனுடன் வெளிநாட்டில் கொண்டாடி வருகிறார்.
இந்த முறை தம்பதியினர் தங்கள் குழந்தைகளுக்கு முன்னுரிமை அளிக்கும் வகையில், அவர்களுடன் வீட்டில் பிறந்தநாளை கொண்டாடவுள்ளதாக கூறப்படுகிறது.
திருமணத்திற்குப் பிறகு வரும் தனது முதல் பிறந்தநாளை கணவர் மற்றும் குழந்தைகளுடன் கொண்டாடவிருக்கும் நயன்தாரா, நெருங்கிய நண்பர்கள் மற்றும் குடும்பத்தினரை வீட்டிற்கு அழைக்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
Post a Comment