சமந்தா தன் மனதை மாற்றிக் கொண்டு நாக சைதன்யாவுடன் மீண்டும் சேர முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது.
ஏ மாய சேசாவே படத்தில் நடித்த போதில் இருந்து நாக சைதன்யாவை காதலித்ததாக தெரிவித்தார் சமந்தா. இதையடுத்து இரு வீட்டார் சம்மதத்துடன் நாக சைதன்யாவை திருமணம் செய்து கொண்டார் .
அமேசானில் இருந்து ஹெட்ஃபோன்கள் மற்றும் ஸ்பீக்கர்கள் இப்போது லான்ச் செய்யப்பட்டுள்ளது விற்பனை முடிவதற்குள் பெறுங்கள்
அவர்களின் திருமணம் இந்து மற்றும் கிறிஸ்தவ முறைப்படி பிரமாண்டமாக நடந்தது. குழந்தை பெறும் ஆசையில் புதுப்பட வாய்ப்புகளை ஏற்காமல் இருந்தார் சமந்தா.
விரைவில் குட் நியூஸ் சொல்வார் என்று ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில் விவாகரத்து குறித்து சமூக வலைதளத்தில் அறிவிப்பு வெளியிட்டார்.
தனக்கு மயோசிடிஸ் எனும் அரிய வகை நோய் இருப்பதாக இரண்டு வாரங்களுக்கு முன்பு சமூக வலைதளத்தில் அறிவித்தார் சமந்தா. அதை பார்த்த திரையுலக பிரபலங்கள், ரசிகர்கள் என்று பலரும் சமந்தாவுக்கு ஆறுதல் கூறினார்கள்.
இந்த நேரத்திலும் சமந்தா தைரியமாக இருப்பதை பலரும் பாராட்டினார்கள். இந்நிலையில் சமந்தாவின் முன்னாள் கணவரான நாக சைதன்யா அவருக்கு போன் செய்து நலம் விசாரித்தாராம்.
நாக சைதன்யா பேசிய பிறகு சமந்தா மனம் மாறிவிட்டதாக கூறப்படுகிறது.
மீண்டும் நாக சைதன்யாவுடன் சேர்ந்து வாழ சமந்தா முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது. இருப்பினும் இதை சமந்தா உறுதி செய்யும் வரை நம்ப முடியாது.
இதற்கிடையே நடந்ததை எல்லாம் மறந்துவிட்டு நாக சைதன்யாவும், சமந்தாவும் மீண்டும் சேர்ந்து நடிக்க முடிவு செய்திருக்கிறார்களாம்.
சமந்தவை பிரிந்தாலும் அவரை பற்றி நாக சைதன்யா எதுவுமே தவறாக பேசியது இல்லை.
தனக்கு ஏற்ற ரீல் ஜோடி சமந்தா என்று விவாகரத்து அறிவிப்புக்கு பிறகு கூட நாக சைதன்யா தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
உலகம் முழுவதும் தரமான முதல் தர வானொலி கேட்க
good
ReplyDeletePost a Comment