பொங்கலுக்கு ரிலீஸ் ஆகும் அஜித்தின் துணிவு படத்தை பார்ப்பதற்கு தல ரசிகர்கள் வெறிகொண்டு காத்திருக்கின்றனர்.
இந்நிலையில் அஜித் இதுவரை நடித்திராத புது கெட்டப்பில் அடுத்த படத்திற்கு கமிட் ஆகி இருக்கிறார் என்ற செய்தி வெளியாகி ரசிகர்களை குஷிப்படுத்தி உள்ளது.
துணிவு படத்திற்கு பிறகு அஜித் விக்னேஷ் சிவன் படத்தை முடித்துவிட்டு, அடுத்ததாக நடிக்கும் படத்திற்காக ஒன்றரை வருடம் இடைவெளி எடுத்துக் கொள்கிறார்.
அந்த கால இடைவெளியில் சோழ சாம்ராஜ்யத்தை ஆட்டிப்படைத்த மன்னர் கதையில் ராஜராஜ சோழனாக வேடம் தரிப்பதற்காக, தன்னுடைய லுக்கை மாற்றப் போகிறார்.
ஆனால் முதலில் அஜித்தின் அஸ்தானை இயக்குனர் ஒருவருடைய படத்தில் ராஜராஜ சோழன் கெட்டப்பில் நடிப்பதற்காக மறுப்பு தெரிவித்தாலும், தற்சமயம் ரசிகர்கள் வரலாற்று கதையை விரும்பி பார்க்கின்றனர் என்பதை புரிந்து கொண்டு, இப்போது அதற்கு ஒத்துக் கொண்டுள்ளார்.
விஷ்ணுவர்தன் இயக்கத்தில் அஜித் நடித்த பில்லா, ஆரம்பம் இரண்டு படங்களுமே அஜித்திற்கு முக்கியமான படங்கள்.
விஷ்ணுவர்தன் எப்போதோ அஜித்திற்காக கதை தயார் செய்து வைத்து விட்டார். ஆனால் அஜித் வேறு இயக்குனர்களிடம் சென்றுவிட்டார்.
ஏற்கனவே அஜித்திடம் ராஜராஜசோழன் கதையை சொல்லி பாலகுமாரன் ஸ்க்ரிப்ட் எழுத எல்லாம் தயார் நிலையில் இருந்தது. ஆனால் இது தனக்கு செட்டாகாது என நினைத்துக் கொண்டு அஜித் அதை நிராகரித்து விட்டார்.
தற்போது வரலாற்று சம்பந்தமான கதைகள் ரசிகர்களின் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைக்கிறது என்கின்ற காரணத்தால், மீண்டும் விஷ்ணுவர்தன் மற்றும் அஜித் இணைவது உறுதியாகியுள்ளது.
ஏற்கனவே மணிரத்தினத்தின் பொன்னியின் செல்வன் போன்ற வரலாற்று கதையம்சம் கொண்ட படங்கள் ரசிகர்களிடம் அமோக வரவேற்பு கிடைத்தது.
ஆகையால் முன்பு எடுத்த முடிவை அஜித் மாற்றிக் கொண்டு விஷ்ணுவரதன் படத்தில் நடிக்க தயாராகி உள்ளார்.
இதற்காக தன்னை தயார்படுத்திக்கொள்ள ஒன்றரை வருடம் எடுத்துக் கொள்ளப் போகிறார். அதற்கான வேலைகள் இப்போதே ஆரம்பமாகியுள்ளன.
உலகம் முழுவதும் தரமான முதல் தர வானொலி கேட்க
சூப்பர் வாழ்த்துக்கள்
ReplyDeletePost a Comment