சமிபக்காலமாக ஆபரணத் தங்கத்தின் விலை கடகடவென உயர்ந்துள்ளது.
ஆனால் கடந்த இரண்டு நாட்களாக தங்கத்தின் விலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது.
கடந்த சில நாட்களாக ஐரோப்பிய பொருளாதாரத்தை மந்த நிலை ஏற்பட்டதால் யூரோவின் பெறுமதி டாலருக்கு இணையான மதிப்பில் இருந்தது.
இதனால் தங்கத்தின் விலை அதிகரித்து காணப்பட்டது. இதனால் தங்க ஆபரணங்கள் கொள்வனவில் சற்று சரிவு நிலை ஏற்பட்டுள்ளது.
தற்போது யூரோவின் பெறுமதியின் மாற்றம் ஏற்பட்டுள்ளதால் தங்கத்தின் விலை குறைந்துள்ளது.
இதன்படி, ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ.4,850 என்றும், 22 காரட் 8 கிராம் தங்கத்தின் விலை ரூ. 38,800 ஆகவும் உள்ளது. மேலும் இன்று சவரனுக்கு ரூ.160 வாக குறைந்துள்ளது.
24 காரட் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.5,290 என்றும், சவரனுக்கு ரூ.42,320 ஆக விற்பனை செய்யப்படுகிறது. மேலும் இன்று சவரனுக்கு ரூ.136 வாக குறைந்துள்ளது.
உலகம் முழுவதும் தரமான முதல் தர வானொலி கேட்க
Post a Comment