யாழ்ப்பாணம் கொட்டடி பகுதியில் 500 மில்லி கிராம் ஹெரோயின்


 யாழ்ப்பாணம் கொட்டடி பகுதியில் 500 மில்லி கிராம் ஹெரோயின் போதைப் பொருளுடன் (ஞாயிற்றுக்கிழமை) மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

யாழ் மாவட்ட புலனாய்வு பிரிவுக்கு கிடைக்க ரகசிய தகவலை அடுத்து கொட்டடி பகுதியில் உள்ள வீடு ஒன்றினை சோதனையிட்ட போது 500 மில்லி கிராம் ஹெரோயின் போதை பொருளுடன் கொட்டடிப் பகுதியைச் சேர்ந்தவர் மூவர் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.

கைது செய்யப்பட்டவர்களுக்கு ஏற்கனவே போதைப் பொருள் வழக்குகள் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளதாகவும் , இவர்கள்
மாதகல் பகுதியில் இருந்து போதைப்பொருளை வாங்குவதாகவும் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

மேலதிக விசாரணைக்காக மூவரும் யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் பாரப்படுத்தப்பட்டுள்ளதோடு விசாரணைகளின் பின் நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட உள்ளனர்.

Post a Comment

Previous Post Next Post

5

5

5

Girl in a jacket Girl in a jacket

5

5

HTML tutorial