முன்னாள் அதிமுக அமைச்சர் மணிகண்டன் மீது நடிகை புகார்

முன்னாள் அதிமுக அமைச்சர் மணிகண்டன்மீதான பாலியல் புகார் வாபஸ்! - என்ன நடந்தது?

முன்னாள் அதிமுக அமைச்சர் மணிகண்டன் மீது நடிகை புகார்

முன்னாள் அமைச்சர் மணிகண்டன்மீது நடிகை சாந்தினி அளித்திருந்த பாலியல் புகாரைத் திரும்பப் பெற்றுள்ளார்.

கடந்த அ.தி.மு.க ஆட்சியில் தகவல் தொழில்நுட்ப துறை அமைச்சராக இருந்தவர் மணிகண்டன். இவர்மீது திரைப்பட துணை நடிகை சாந்தினி என்பவர், ``கடந்த ஐந்து வருடங்களாக மணிகண்டனுடன் சேர்ந்து வாழ்ந்து வந்தேன். இதன் காரணமாக, மூன்று முறை கர்ப்பம் அடைந்திருக்கிறேன். மணிகண்டனின் நெருக்கடி காரணமாக அந்த கர்ப்பத்தைக் கலைத்துள்ளேன். முதலில் திருமணம்செய்து கொள்வதாகக் கூறிவிட்டு இப்போது என்னை அவர் ஏமாற்றிவிட்டார்" என்று போலீஸில் புகார் தெரிவித்திருந்தார்.

மணிகண்டன், சாந்தினி
மணிகண்டன், சாந்தினி

இந்த புகாரை அடுத்து, அடையாறு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் மணிகண்டன்மீது ஐந்து பிரிவுகளில் வழக்கு பதிவுசெய்யப்பட்டது. மேலும், பெங்களூரில் தலைமறைவாக இருந்த அவர் கைதுசெய்யப்பட்டார். கைதுசெய்யப்பட்ட பின்பு பலமுறை அவரின் ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், நிபந்தனைகளுடன் சென்னை உயர் நீதிமன்றம் அவருக்கு ஜாமீன் வழங்கியது.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா ₹999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!GET OFFER

இந்த வழக்கு தொடர்பாக முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மீது அடையாறு அனைத்து மகளிர் காவல்துறையினர், சைதாப்பேட்டை 11-வது நீதிமன்றத்தில் 351 பக்க குற்றப்பத்திரிகையைத் தாக்கல் செய்திருந்தனர். இந்த வழக்கு நடைபெற்றுவரும் வேளையில், தன் மீதான வழக்கை ரத்து செய்யக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மணிகண்டன் வழக்கு தொடர்ந்திருந்தார்.

சென்னை உயர் நீதிமன்றம்
சென்னை உயர் நீதிமன்றம்

இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது, சாந்தினி அளித்திருந்த புகாரை அவர் தரப்பு திரும்பப் பெற்றுவிட்டதாகக் கூறப்பட்டது. அப்போது பேசிய நீதிபதி, ``சாந்தினிமீது மணிகண்டன் தனது புகழுக்குக் களங்கம் விளைவித்ததாக வழக்கு தொடர்ந்தால் என்ன ஆகும்" என்று கூறி, மணிகண்டன் மீதான வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டார். 

Post a Comment

Previous Post Next Post

5

5

5

Girl in a jacket Girl in a jacket

5

5

HTML tutorial