விநியோகஸ்தர்கள் சங்க தலைவரானார் கே.ராஜன்

தமிழ் சினிமாவில் முக்கியமான அமைப்புகளில் ஒன்றாக இருப்பது சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்ட திரைப்பட விநியோகஸ்தர்கள் சங்கம்.
இந்த சங்கத்திற்கு இயக்குநர் டி.ராஜேந்தர் தலைவராக இருந்தார். அவரது பதவிக்காலம் முடிவடைந்தால் சங்கத்தின் புதிய நிர்வாக குழுவுக்கு நேற்று (19.6.2022) தேர்தல் நடைபெற்றது.
தயாரிப்பாளர் கே.ராஜன் தலைமையில் ஒரு அணியும், விநியோகஸ்தர் திருவேங்கடம் தலைமையில் ஒரு அணியும் போட்டியிட்டனர். நேற்று காலை 9 மணிக்கு தொடங்கிய வாக்குப் பதிவு மாலை 5 மணிக்கு முடிவடைந்தது. மாலை 6 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கி இரவு 10 மணிக்கு முடிவுகள் அறிவிக்கப்பட்டன.
கே.ராஜன் தலைமையில் போட்டியிட்ட நிர்வாகிகள் அனைவரும் வெற்றிபெற்றனர். செயற்குழு உறுப்பினர் 16 பேரில் 9 பேர் கே.ராஜன் அணியை சேர்ந்தவர்கள் வெற்றிபெற்றனர்.
வாக்குகள் விபரம்
மொத்த வாக்குகள்:469
பதிவான வாக்குகள்: 359
வெற்றி பெற்றவர்கள் வாக்கு விபரம்
தலைவர் கே.ராஜன் - 230
திருவேங்கடம் -124
செல்லாத ஓட்டு - 5
செயலாளர்
கே.காளையப்பன் - 186
ஸ்ரீராம் - 109
அல்டாப் - 53
செல்லாத ஓட்டு - 11
துணைத் தலைவர்
எஸ்.நந்தகோபால் - 196
அனந்த் - 154
செல்லாத ஓட்டு -9
பொருளாளர்
பி.முரளி - 176
சஞ்சய்லால்வானி - 175
செல்லாத ஓட்டு - 8
இணைச்செயலாளர்
சாய் என்கிற சாய்பாபா -199
ராஜகோபால் -147
செல்லாத ஓட்டு -13
Post a Comment