வலிமை திரைப்படத்தை தொடர்ந்து போனி கபூர் தயாரிப்பில் எச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் AK61. இப்படத்தின் படப்பிடிப்பு ஐதராபாத்தில் ராமோஜி ராவ் பிலிம் சிட்டியில் பிரம்மாண்ட செட் அமைத்து ஷூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இப்படம் பிரபல வெப் சீரிஸ் ‘மணி ஹெய்ஸ்ட்’ போல வங்கி கொள்ளை சம்மந்தமாக இத்திரைக்கதை உருவாகவுள்ளதாக தகவல் வெளியானது. இப்படத்தில் சண்டைக்காட்சிகள் என தனியே ஏதும் இல்லது ஹீரோக்கும், வில்லனுக்குமான டெக்னிக்கல் சண்டையாக இருக்கும் என சொல்லப்படுகிறது.
பல ஆண்டுகள் கழித்து அஜித் இத்திரைப்படத்தில், டபுள் ரோலில் அதாவது ஹீரோ மற்றும் வில்லன் என நெகட்டிவ் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இப்படம் முன்பே அனைவரின் கவனத்தை ஈர்த்துவிட்டது. இப்படத்தில் சார்பேட்டா பரம்பரை பட புகழ் ஜான் கொக்கேன் மற்றும் பலர் நடிப்பதாக சொல்லப்பட்டது.
மேலும், அஜித் ஜோடியாக தபு, ராகுல் ப்ரீத்தி சிங் நடிப்பதாக அடுத்தடுத்து சமூக வலைத்தளங்களில் தகவல்கள் வெளியாகி வந்த நிலையில், இப்படத்தில் பிரபல மலையாள நடிகை மஞ்சு வாரியர் கதாநாயகியாக நடிக்க இருப்பதாக கூறப்பட்டது.
Post a Comment