ராஜிவ் காந்தி கொலை வழக்கில் சிறைத் தண்டனை பெற்று வந்த பேரறிவாளன் விடுதலையான நிலையில் இன்று (மே 18) முதன் முறையாக செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்தார்.

 ராஜிவ் காந்தி கொலை வழக்கில் சிறைத் தண்டனை பெற்று வந்த பேரறிவாளன் விடுதலையான நிலையில் இன்று (மே 18) முதன் முறையாக செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்தார்.



திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டையில் பேரறிவாளனும் அவரது தாயார் அற்புதம்மாளும் மகிழ்ச்சியுடன் செய்தியாளர்களைச் சந்தித்தனர். பேரறிவாளன் பேசுகையில், “ 31 ஆண்டுகளாக சட்டப்போராட்டம் தான் என் மனதிலிருந்தது. இப்போதுதான் மீண்டு வந்திருக்கிறேன். கொஞ்சம் போல நான் காற்றைச் சுவாசிக்க வேண்டும், மூச்சு விட வேண்டும். கொஞ்சம் போல ஆசுவாசப்படுத்திக் கொள்ள வேண்டும்.



சட்டப்ப்போராட்டமே என் வாழ்க்கையாக இருந்தது. திறம்பட சட்டப்போராட்டத்தை நடத்தினால் ஏதோ ஒரு கட்டத்தில் வெற்றி அடைய முடியும் என்ற நம்பிக்கையோடு இருந்தேன். என்னுடைய எதிர்காலம் குறித்த எல்லா கேள்விகளுக்கும், என்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டு பின்னர் உங்களைச் சந்திக்கும் போது சொல்கிறேன். குடும்பத்தோடு, நண்பர்களோடு நேரம் செலவிட வேண்டும்” என்றார்.

ராஜிவ் காந்தி கொலை வழக்கில் சிறை தண்டனை பெற்று வரும் மற்ற 6 பேரும் விடுதலை ஆவார்களா என்ற கேள்விக்கு, இன்னும் நான் தீர்ப்பைப் பார்க்கவில்லை பார்த்துவிட்டுச் சொல்கிறேன் என்றார்.

மேலும் அவர், “நீதியரசர்கள் கிருஷ்ணய்யர், கே.டி.தாமஸ் ஆகியோரால் நான் இங்கு நிற்கிறேன். நீதியரசர் கிருஷ்ணய்யர் பற்றி நான் சொல்ல வேண்டும். உச்ச நீதிமன்றத்தில் வரலாற்றுச் சிறப்பு மிக்க ஒரு தீர்ப்பை வழங்கியவர். அவர் வழங்கிய தீர்ப்பு தான் இன்று நான் வெளிவருவதற்கு முக்கிய காரணமாக அமைந்தது. அவர் எனக்காக முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு கடிதம் எழுதினார். அதில், எனக்காக ”மண்டியிட்டுக் கேட்டுக்கொள்கிறேன்” என்றெல்லாம் குறிப்பிட்டிருந்தார். நான் நிரபராதி என்று நம்பியதால் தான் அவர் இப்படி கடிதம் எழுதினார். எனக்காக, நான் நினைத்துக் கூட பார்க்க முடியாத வழக்கறிஞர்களை அமர்த்திக் கொடுத்தார். அவரை இந்த நேரத்தில் நினைவுகூர்கிறேன்.

கடந்த 6 ஆண்டுகளாக என்னிடம் எந்த கட்டணத்தையும் எதிர்பார்க்காமல் மூத்த வழக்கறிஞர் கோபால் சங்கரநாராயணன் வாதாடினார். அதுபோன்று தமிழக அரசு தனது அதிகாரத்தை நிலைநாட்டும் வகையில் அஃபிடவிட் தாக்கல் செய்தது. அரசியலமைப்பு நிபுணர் என்று சொல்லக்கூடிய ராகேஷ் திவேதி போன்ற வழக்கறிஞர்களை வைத்து தமிழக அரசு வாதாடியது.



 

இதுபோன்று நன்றி சொல்வதற்கான பட்டியல் நிறைய இருக்கிறது. இவர்களை எல்லாம் நேரில் சந்தித்து நன்றி சொல்ல வேண்டும். ஊடக நண்பர்கள் இல்லை என்றால் இந்த உண்மைகள் எல்லாம் வெளிவந்திருக்காது. மாற்றங்கள் ஏற்பட்டிருக்காது.


அதுபோன்று சிறைதுறை, காவல்துறை என எல்லா துறைகளிலிருந்தும் எனக்கு ஆதரவு தெரிவித்திருக்கிறார்கள்” என்று கூறினார்.

Post a Comment

Previous Post Next Post

5

5

5

Girl in a jacket Girl in a jacket

5

5

HTML tutorial