பொது அறிவு கேள்விகள்

 பொது அறிவு கேள்விகள்


வள்ளுவரைப் பெற்றதால் பெற்றதே புகழ் வையகமே எனக்கூறியவர் 
யார்? 


பாரதிதாசன்


சுதந்திர தொழிலாளர்கள் கட்சியை ஆரம்பித்தவர் யார்?

டாக்டர் பி. ஆர். அம்பேத்கர், அவர்கள், சுதந்திரத் தொழிலாளர் கட்சியை நிறுவியவர் (1935)   இவரை இந்தியாவின் இரும்பு மனிதர் என்று கூறப் படுகிறார்


பிற்காலச் சோழர்களின் கடைசி அரசர் யார்?

மூன்றாம் ராஜேந்திரன்  சோழர்


சென்னைப் பல்கலைக்கழகம் தோற்றுவிக்கப்பட்ட ஆண்டு எது?

சென்னைப் பல்கலைக்கழகம் தமிழ்நாட்டுப் பல்கலைக்கழகங்களுள் ஒன்றாகும். இது 1851-ஆம் ஆண்டு சென்னையில் தொடங்கப்பட்டது. இஃது இந்தியாவின் பழமையான பல்கலைக்கழகங்களில் ஒன்றாகும். லண்டன் பல்கலைக்கழகத்தின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட இது, 5 செப்டம்பர் 1857-இல் இந்திய சட்டமன்றத்தின் கீழ் இணைக்கப்பட்டது. எனினும் இப்பல்கலைக்கழகம், நடுவண் அரசின் பல்கலைக்கழக மானிய ஆணைக்குழு (UGC) அமைக்கும் வழிமுறைகளுக்கு உட்பட்டது. மருத்துவம், பொறியியல், சட்டம், அறிவியல், கலை முதலிய அனைத்துத் துறைகளும் இருந்தன. நீண்ட காலம் தமிழகத்தின் ஒரே பல்கலைக்கழகமாக விளங்கியது. இப்பொழுது சட்டம், பொறியியல், மருத்துவம் ஆகிய பிரிவுகள் பிற பல்கலைக்கழகங்களுடன் இணைக்கப்பட்டு விட்டன.


இந்திய உச்சநீதிமன்ற நீதிபதிகளின் ஓய்வு பெறும் வயது?

65 வயது


அதிக விடுமுறை நாட்கள் கொண்ட நாடு எது ????

 மியாண்மார்


முழுவதும் பெண்களுக்காக தொடங்கப்பட்ட முதல் இந்திய பல்கலைக்கழகம் எது????

கொடைக்கானல் அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழகம்


இந்திய போலிஸ் பணியில் (ஐபிஎஸ்) சேர்ந்த முதல் பெண் யார் ???


கிரண் பேடி இவர் 9/ஜூன் 1949 பிறந்தார் இந்திய காவல் துறையில் 1972 ஆவர்

சில ஆண்டுகளுக்கு முன்பு பாண்டிச்சேரி மாகான கவர்னர் பதவியில் இருந்தார் என்பது குறிப்பிட தக்கது 

 

வள்ளலார் என்று போற்றப்பட்டவர் யார்??


இராமலிங்க அடிகளார் 


இவர் கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் இருந்து 10 மைல் தொலைவில் உள்ள மருதூரில் புரட்டாசி 19 (5 அக்டோபர் 1823) இல் கருணீகர் குலத்தில் பிறந்தவர். பெற்றோர் இராமையாபிள்ளை, சின்னம்மையார். இவரோடு சபாபதி, பரசுராமன், உண்ணாமுலை, சுந்தராம்பாள் ஆகிய நால்வரும் உடன்பிறந்தவர்கள். இராமலிங்கர் பிறந்த ஆறாம் மாதத்திலேயே தந்தையை இழந்தார். தாயார் குழந்தைகளோடு பொன்னேரி சென்று வாழ்ந்தார். பின்னர் சென்னையில் ஏழு கிணறு பகுதி 39, வீராசாமி பிள்ளை தெருவில் உள்ள வீட்டில் குடியேறினார். அண்ணன் சபாபதி சமயச் சொற்பொழிவு செய்து வந்தார்.


வள்ளலார் என்று அழைக்கப்படும் இராமலிங்க அடிகளார் 

(5 அக்டோபர் 1823 – 30 சனவரி 1874) ஓர் ஆன்மீகவாதி ஆவார். "எல்லா மதங்களிலும் உள்ள உண்மை ஒன்றே" என்பதை குறிக்கும் வண்ணம், இவர் தோற்றுவித்த மார்க்கத்திற்கு "சர்வ சமய சமரச சுத்த சன்மார்க்கம்" என்று பெயரிட்டார். சைவ சமயத்தில் பல்வேறு சீர்திருத்தங்கள் செய்த வள்ளலாரை பழமைவாதிகள் கடுமையாக எதிர்த்தனர். இவர் சாதிய பாகுபாடுகளை கடுமையாக சாடினார்.


"வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம், வாடினேன்" என்று பாடிய வள்ளலார், 1867-ல் கடலூர் மாவட்டம் வடலூரில் "சத்திய ஞான தர்ம சபை" என்ற சபையை நிறுவினார். இங்கு வரும் அனைவருக்கும் 3 வேளையும் உணவு இலவசமாக வழங்கப்பட்டது. இன்றளவும் செயல்பட்டு வரும் இந்த தர்ம சபை வள்ளலார் பெயரால் லட்சக்கணக்கான மக்களுக்குப் பசியாற்றி வருகிறது. தர்ம சபைக்கான உணவுப் பொருட்களை தமிழ்நாடு அரசு குறைந்த விலைக்கு வழங்கி வருவது குறிப்பிடத்தக்கது.


எதிலும் பொது நோக்கம் வேண்டும், பசித்தவர்களுக்கு சாதி, மதம், இனம், மொழி வேறுபாடு கருதாது உணவளித்தல் வேண்டும், மத வெறி கூடாது ஆகியவை இவரின் முக்கிய கொள்கைகள் ஆகும்.  இவர் பாடிய ஆறாயிரம் பாடல்களின் தொகுப்பே 'திருவருட்பா' என்று அழைக்கப்படுகிறது. இவரது சேவையை கருத்தில் கொண்டு, இந்திய அரசு 2007ல் இவருக்கு அஞ்சல் தலை வெளியிட்டு கௌரவித்தது.



பாவேந்தர் எனப் போற்றப்படுபவர் யார் ?????

பாரதிதாசனார்

பாவேந்தர் என்று அழைக்கப் பட்டவர் , புதுவைக்கவிஞர், புதுமைக் கவிஞர், புரட்சிக் கவிஞர், கனக. சுப்புரத்தினம் என்னும் இயற் பெயர் கொண்ட திரு. பாரதிதாசன் அவர்கள். அவருடைய பாடல்கள் புதுமையான, புரட்சிகரமான கருத்துக்களைக் கொண்டிருந்த காரணத்தாலும் அன்றைய கவிஞர்களால் பெரிதும் போற்றப் பட்டதாலும் பாவேந்தரானார்.


  உலக விலங்குகள் தினமாக அழைக்கப்படுவது எப்போ எத்தனையாம் திகதி ?

      அக்டோபர் 4-ம் தேதி

உலக விலங்கு தினத்தை சைனாலஜிஸ்ட் ஹென்ரிச் ஜிம்மர்மேன் உருவாக்கினார். அவர் முதல் உலக விலங்கு தினத்தை 24 மார்ச் 1925 அன்று ஜெர்மனியின் பெர்லினில் உள்ள அரண்மனை விளையாட்டு மைதானத்தில் ஏற்பாடு செய்தார். இந்த முதல் நிகழ்வில் 5,000 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். சுற்றுச்சூழல் நிகழ்வின் புரவலர் புனித அசிசியின், புனித பிரான்சிஸின் பண்டிகை நாளோடு இணைவதற்காக இந்த நிகழ்வு முதலில் அக்டோபர் 4 ஆம் தேதி திட்டமிடப்பட்டது, இருப்பினும் அந்த இடம் அந்த நாளில் கிடைக்கவில்லை. இந்த நிகழ்வு அக்டோபர் 4 ஆம் தேதி முதல் முறையாக 1929 இல் மாற்றப்பட்டது. ஆரம்பத்தில் அவர் ஜெர்மனி, ஆஸ்திரியா, சுவிட்சர்லாந்து மற்றும் செக்கோஸ்லோவாக்கியாவில் மட்டுமே பின்பற்றுவதைக் கண்டார். ஒவ்வொரு ஆண்டும் ஜிம்மர்மேன் உலக விலங்கு தினத்தை மேம்படுத்துவதில் அயராது உழைத்தார். இறுதியாக, மே 1931 இல் புளோரன்ஸ் இத்தாலியில் நடந்த சர்வதேச விலங்கு பாதுகாப்பு காங்கிரஸின் மாநாட்டில், அக்டோபர் 4 - உலக விலங்கு தினத்தை உலகளாவியதாக மாற்றுவதற்கான அவரது முன்மொழிவு ஒருமனதாக ஏற்றுக்கொள்ளப்பட்டு ஒரு தீர்மானமாக ஏற்றுக்கொள்ளப்பட்டது


ஆபத்தான உயிரினங்களின் அவல நிலையை முன்னிலைப்படுத்த விரும்பிய இத்தாலியின் புளோரன்ஸ் நகரில் சூழலியல் நிபுணர்களின் மாநாட்டில் 1931 ஆம் ஆண்டில் உலக விலங்கு தினம் தொடங்கியது என்று சில நேரங்களில் தவறாகக் குறிப்பிடப்படுகிறது.

இன்று, உலக விலங்கு தினம் 2003 ஆம் ஆண்டிலிருந்து இங்கிலாந்தை தளமாகக் கொண்ட விலங்கு நல தொண்டு நிறுவனமான நேச்சர்வாட்ச அறக்கட்டளையின் தலைமையில் மற்றும் நிதியுதவி அளிக்கும் விலங்கு பாதுகாப்பு இயக்கத்தை ஒன்றிணைக்கும் உலகளாவிய நிகழ்வாக வளர்ந்து வருகிறது. அக்டோபர் 27, 2006 அன்று போலந்து பாராளுமன்றம் அக்டோபர் 4 ஐ விலங்கு தினமாக நிறுவுவது குறித்த தீர்மானத்தை நிறைவேற்றியது.

அர்ஜென்டினாவில், விலங்கியல் தினம் 1908 ஆம் ஆண்டு முதல் அனுசரிக்கப்பட்டு வருகிறது. இது விலங்குப் பண்ணையின் இயக்குநரும் புவெனஸ் அயர்ஸின் விலங்கு பாதுகாப்பு சங்கத்தின் தலைவருமான இக்னாசியோ லூகாஸ் அல்பராசின் தலைமையில் இருந்தது. ஆரம்பத்தில் இந்த நாள் ஏப்ரல் 2 ஆம் தேதி அனுசரிக்கப்பட்டது. பின்னர்,1926 ஏப்ரல் 29 ஆம் தேதி அல்பாரிகான் இறந்த பிறகு, அவரின் நினைவாக அன்றைய தினமே விலங்கியல் தினமாக அனுசரிக்கப்படுகிறது.


 தேசியக் கவி எனப் போற்றப்பட்டவர் யார் ?

     பாரதியார்

பாரதியார் வரலாறு பற்றி இந்த பதிவில் பார்க்களம்.

இவருடைய இயற்பெயர் சின்னசுவாமி. சுப்பிரமணிய பாரதி (Subramania Bharati) பாரதியார் வாழ்ந்த காலம் டிசம்பர் 11, 1882 – செப்டம்பர் 11, 1921.  பாரதி ஒரு கவிஞர், எழுத்தாளர், பத்திரிக்கையாசிரியர், விடுதலைப் போராட்ட வீரர் மற்றும் சமூக சீர்திருத்தவாதி ஆவார். இவரைப் பாரதியார் என்றும் மகாகவி என்றும் அழைக்கின்றனர். பாரதி, தமிழ்க் கவிதையிலும் உரைநடையிலும் சிறப்பான புலமை கொண்டு, நவீனத் தமிழ்க் கவிதைக்கு முன்னோடியாகத் திகழ்ந்தார்.



தமிழ், தமிழர் நலன், இந்திய விடுதலை, பெண் விடுதலை, சாதி மறுப்பு, பல்வேறு சமயங்கள் குறித்து கவிதைகளும் கட்டுரைகளும் எழுதியுள்ளார். தம் எழுத்துகள் மூலமாக மக்கள் மனதில் விடுதலை உணர்வை ஊட்டியவர். எட்டப்ப நாயக்கர் மன்னர் இவருடைய கவித்திறனை மெச்சி, கலைமகள் எனப் பாெருள்படும் பாரதி என்ற பட்டம் வழங்கினார். பாரதியாரின் நூல்கள் தமிழ்நாடு மாநில அரசினால் 1949 ஆம் ஆண்டில் நாட்டுடைமை ஆக்கப்பட்டன.


பாரதி, இந்திய வரலாற்றின் திருப்பங்கள் நிறைந்த காலகட்டத்தில் வாழ்ந்தவர். பால கங்காதர திலகர், உ. வே. சாமிநாதையர், வ. உ. சிதம்பரம் பிள்ளை, மகான் அரவிந்தர் முதலியோர் இவரின் சமகாலத்தைய மனிதர்கள் ஆவர். இவர் விவேகானந்தரின் மாணவியான சகோதரி நிவேதிதையை தமது குருவாகக் கருதினார்.


 முத்தமிழ்க்காப்பியம் என்று குறிப்பிடப்படும் நூல் எது??

       சிலப்பதிகாரம்

காப்பியம் என்றாலே தமிழர்களுக்குச் சிலப்பதிகாரம், சிந்தாமணி முதலான ஐம்பெருங் காப்பியங்களும், சூளாமணி, நீலகேசி முதலான ஐஞ்சிறு காப்பியங்களுமே நினைவுக்கு வரும். தொடர்ந்து பெரியபுராணம், கம்பராமாயணம், வில்லிபாரதம் முதலான பலவும் நம் நினைவுக்கு வருவதுண்டு. 20-ஆம் நூற்றாண்டில் பாரதியின் பாஞ்சாலி சபதம், பாரதிதாசனின் பாண்டியன் பரிசு, புலவர் குழந்தையின் இராவண காவியம், கண்ணதாசனின் ஏசு காவியம் போன்றனவும் காப்பியங்களாகவே எண்ணப்படுகின்றன


தமிழில் தோன்றியுள்ள காப்பியங்களுள் சிலப்பதிகாரம், மணிமேகலை மற்றும் பெரிய புராணம் மட்டுமே தமிழ்நாட்டுக் கதைகளை மூலக் கருவாகக் கொண்டு இயற்றப்பட்டுள்ளன. மற்றவை சமசுகிருதம், பிராகிருதம் ஆகிய மொழிகளின் தழுவல்களாகவோ அல்லது தமிழாக்கங்களாகவோ உள்ளன.



சைவக் காப்பியங்கள்


பெரியபுராணம் · திருவிளையாடல் புராணம் · சுந்தரபாண்டியம் · கடம்பவன புராணம் · திருவாலவாயுடையார் திருவிளையாடற் புராணம் ·


வைணவக் காப்பியங்கள்


கம்பராமாயணம் · வில்லிபாரதம் · பாரத வெண்பா · அரங்கநாதர் பாரதம்


சமணக் காப்பியங்கள்


சீவக சிந்தாமணி · வளையாபதி · நீலகேசி  · பெருங்கதை · யசோதர காவியம் · நாககுமார காவியம் · உதயணகுமார காவியம்  · சூளாமணி ·


பௌத்தக் காப்பியங்கள்


மணிமேகலை · குண்டலகேசி ·


இசுலாமியப் பெரும் காப்பியங்கள்


கனகாபிடேக மாலை · சீறாப்புராணம் · திருமணக் காட்சி · சின்னச் சீறா · முகைதீன் புராணம்  · நவமணி மாலை ·



இசுலாமியச் சிறு காப்பியங்கள்


மிகுராசு மாலை ·


கிறித்தவக் காப்பியங்கள்


தேம்பாவணி · திருச்செல்வர் காவியம் · கிறிஸ்தாயனம் · திருவாக்குப் புராணம் ·

 ஞானானந்த புராணம் · ஞானாதிக்கராயர் காப்பியம் · அர்ச்சயசிஷ்ட சவேரியார் காவியம்

 · கிறிஸ்து மான்மியம் · இரட்சணிய யாத்திரிகம் · சுவிசேட புராணம் · திரு அவதாரம் ·

 சுடர்மணி · கிறிஸ்து வெண்பா · இயேசு காவியம் · அறநெறி பாடிய வீரகாவியம் ·

 அருள்நிறை மரியம்மை காவியம் · இயேசு மாகாவியம் · இதோ மானுடம் · புதிய சாசனம் ·

 பவுலடியார் பாவியம் · திருத்தொண்டர் காப்பியம் · ஆதியாகம காவியம் · அருள் மைந்தன்

 மாகாதை · இயேசுநாதர் சரிதை · பிள்ளை வெண்பா என்னும் தெய்வசகாயன் திருச்சரிதை ·

 புனித பவுல் புதுக்காவியம் · கன்னிமரி காவியம் · புதுவாழ்வு · சிலுவையின் கண்ணீர்


தமிழின் தற்காலக் காப்பியங்கள்


பாரதசக்தி மகாகாவியம் · இராவண காவியம் ·


ஈழத்துக் காப்பியங்கள்


கண்ணகி வழக்குரைக் காவியம்




Post a Comment

5

5

5

Girl in a jacket Girl in a jacket

5

5

HTML tutorial