நீல நிற டாப்! பிங்க் பேண்ட்! சிவப்பு துப்பட்டாவில் சிரித்தபடியே காரில் இருந்து இறங்கிய கஸ்தூரி

 நீல நிற டாப்! பிங்க் பேண்ட்! சிவப்பு துப்பட்டாவில் சிரித்தபடியே காரில் இருந்து இறங்கிய கஸ்தூரி


சென்னை: தெலுங்கு பேசும் மக்கள் குறித்து அவதூறு பேசியதாக புகாரின் பேரில் ஹைதராபாத்தில் கைது செய்யப்பட்ட நடிகை கஸ்தூரி, சென்னை சிந்தாதிரிப்பேட்டை காவல் நிலையத்திற்கு அழைத்து வரப்பட்டார். அவர் காரில் இருந்து இறங்கிய போது சிரித்தபடியே இருந்தார். அவர் எழும்பூர் 5ஆவது குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி ரகுபதி ராஜா முன்பு ஆஜர்படுத்தப்பட்டுள்ளார்.  ஃப்ரீ ஹேர் விட்டுக் கொண்டு கருநீல நிற சுடிதாரும், பிங்க் (வாடாமல்லி) நிற பேண்ட்டும், சிவப்பு துப்பட்டாவும் அணிந்திருந்த கஸ்தூரி , ஹைதராபாத்தில் இருந்து சாலை மார்க்கமாக சென்னைக்கு அழைத்து வரப்பட்டார். "நடிகை கஸ்தூரி டெல்லியில் தஞ்சம்? யார் வீட்டில் தங்கியுள்ளார்? விரைந்த தமிழக தனிப்படை! இன்று கைது? " அவர் சென்னை சிந்தாதிரிப்பேட்டை காவல் நிலையத்திற்கு அழைத்து வரப்பட்டார். அங்கு விசாரணைக்கு பிறகு மருத்துவ பரிசோதனைக்கு அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அவர் எழும்பூர் 5ஆவது குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி ரகுபதி ராஜா முன்பு ஆஜர்படுத்தப்பட்டுள்ளார்.  முன்னதாக தெலுங்கு பேசும் மக்கள் அந்தப்புரத்து சேவகர்கள் என மிகவும் கொச்சையாக சென்னையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் கஸ்தூரி பேசியிருந்தார். இதற்கு எதிர்ப்புகள் வலுத்த நிலையில் அவர் தலைமறைவாகிவிட்டார். அவருடைய செல்போனும் ஸ்விட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது. இந்த நிலையில் அவரை பிடிக்க தனிப்படை போலீஸார் அமைக்கப்பட்டிருந்தனர். இதனிடையே தனக்கு முன்ஜாமீன் கேட்டு சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் கஸ்தூரி மனுத்தாக்கல் செய்தார். அந்த மனுவை விசாரித்த நீதிபதி, கஸ்தூரியின் முன்ஜாமீன் மனுவை ரத்து செய்தார். இதையடுத்து அவர் கைதாவது உறுதியானது. 




அவரது இருப்பிடத்தை தனிப்படை போலீஸார் தேடி வந்தனர். இந் நிலையில்தான் அவர் ஹைதராபாத்தில் உள்ள தயாரிப்பாளர் ஹரியின் வீட்டில் பதுங்கியிருந்தது தெரியவந்தது. இதையடுத்து அங்கு விரைந்த தனிப்படை போலீஸார், உள்பக்கமாக பூட்டியிருந்த வீட்டின் கதவை தட்டினர். ஆனால் கஸ்தூரி திறக்கவில்லை. கதவை உடைத்துக் கொண்டு உள்ளே வருவோம் என போலீஸார் எச்சரித்ததும் கஸ்தூரி கதவை திறந்தார். பின்னர் அவர் கைது செய்யப்பட்டார். தனது செல்போனை ஸ்விட்ச் ஆப் செய்துவிட்டு தயாரிப்பாளர் ஹரியின் செல்போனில் இருந்து தனக்கு தெரிந்தவர்களுக்கு கஸ்தூரி போன் செய்தாராம். அதை வைத்துதான் தனிப்படை போலீஸ், அவருடைய இருப்பிடத்தை கண்டறிந்தது. இதையடுத்து அவரை சாலை மார்க்கமாக சென்னைக்கு தனிப்படையினர் அழைத்து வந்தனர். அவர் காரில் இருந்து இறங்கும் போதே எந்த டென்ஷனும் இல்லாமல் சிரித்தபடியே இறங்கினார். நீல நிற சுடிதார், பிங்க் நிற பேண்ட், சிவப்பு துப்பட்டா அணிந்து கொண்டிருந்தார். அவரை பெண் போலீஸார் சிந்தாதிரிப்பேட்டை காவல் நிலையத்தின் உள்ளே அழைத்து சென்றனர்.  அங்கு அவரிடம் விசாரணை நடத்தப்படும். பிறகு அவர் மருத்துவ பரிசோதனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். பின்னர் அவர் எழும்பூர் 5ஆவது குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி ரகுபதி ராஜா முன்பு ஆஜர்படுத்தப்பட்டுள்ளார்.


Post a Comment

Previous Post Next Post

5

5

5

Girl in a jacket Girl in a jacket

5

5

HTML tutorial