தமிழை மறந்துபோன தமிழர்கள்.. ! 150 ஆண்டுகளாக ஃபிஜியில் வாழும் மக்களின் நிலை
ஃபிஜி: உலகம் முழுவதும் பல நாடுகளில் தமிழ் மொழியைக் கற்றுக்கொள்ள ஆர்வம் காட்டிவரும் பிறநாட்டினர் மத்தியில் தமிழ் வம்சாவளியைச் சேர்ந்த, சுமார் 150 ஆண்டுகள் முன்பாக ஃபிஜித் தீவு சென்ற தமிழர்கள் இன்றைக்கு தங்களின் தாய் மொழியை மறந்து வாழ்ந்து வருகின்றனர். AD சவுத் ஆப்பிரிக்காவில் உள்ள முக்கியமான தீவு ஃபிஜி. இந்தத் தீவின் முக்கியமான ஏர்போர்ட் நகரம் நாடி. இதன் தலைநகரம் என்றால் சுவா. அது நாடியிலிருந்து 300 கிமீட்டர் தொலைவில் இருக்கிறது. இந்த நாட்டின் நிறையத் தமிழர்கள் இருக்கிறார்கள் என்பது உலகத்திற்கே தெரியும். அதைத்தாண்டி மொத்த மக்கள் தொகையில் 40% பேர் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர்கள். "" இந்தத் தீவுக்குப் பிரிட்டிஷ் ஆட்சிக்காலத்தில் அடிமைகளாக வேலை செய்வதற்காகப் பல ஆயிரம் தமிழர்கள் அழைத்து வரப்பட்டனர். சாலமன் தீவு, வனுவட்டு அடுத்து ஃபிஜித் தீவு ஆகிய மூன்று பகுதிகளுக்கு இடம்பெயர்ந்தனர். கிட்டத்தட்ட 100 ஆண்டுகள் முன்பே இங்கே வாழும் இந்தியர்களின் அவல நிலை பற்றி பாரதியார் 'கரும்புத் தோட்டத்திலே' என்ற பாடலை எழுதி, அதில் நம் மக்கள் படும் துயரத்தைப் பற்றி படம்பிடித்துக் காட்டி இருக்கிறார். இந்தப் பிஜித் தீவுக்கு இப்போது நேரடியாக ஒரு விசிட் அடித்துள்ளார் செந்தில் குமார் என்ற யூடியூபர். இவர் ஈரோட்டைச் சேர்ந்தவர். குட்டி உலகம் சுற்றும் வாலிபர் என இவரைச் சொல்லலாம். அங்கே இந்தியர்கள் எப்படி வாழ்கிறார்கள்? தமிழர்களின் நிலை என்ன? என்பது பற்றி விரிவாகப் பேசி இருக்கிறார். அவரது வீடியோவில், "சுமார் 3 ஆயிரம் ஆண்டுகள் முன்பே ஃபிஜித் தீவில் மனிதர்கள் குடியேறிவிட்டனர். 330 தீவுகளைக் கொண்ட ஒருநாடுதான் ஃபிஜி. இதில் 100 தீவுகளில்தான் மக்கள் வாழ்கிறார்கள். நாடி என்ற பகுதியை நந்தி என்றே இங்கே உள்ள மக்கள் சொல்கிறார்கள். அது பேச்சு வழக்கில் நாடி என்று மாறிவிட்டது. இந்தத் தீவுக்கு அதிகம் அமெரிக்கர்கள் வருகிறார்கள். அடுத்து லண்டன், கனடா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து ஆகிய அண்டை நாடுகளிலிருந்து சுற்றுலாவாசிகள் வருகின்றனர். இந்த நாடு 1874இல் பிரிட்டிஷாருக்கு அடிமையானது.
அந்த ஆட்சி 1970 வரை இங்கே நிலவியது. ஃபிஜி கரும்புத் தோட்டங்களில் வேலை செய்வதற்காக பிரிட்டிஷார் இந்தியர்களை அழைத்து வந்த முதல் கப்பல் கல்கத்தாவிலிருந்து 1879 ஆம் ஆண்டு மே மாதம் 14 ஆம் தேதி வந்தது. பிறகு மெட்ராஸ் மாகாணத்திலிருந்தும் ஒரு கப்பல் வந்தது. ஆகவே ஃபிஜியில் இரண்டு வகையான இந்தியர்கள் உள்ளனர். கல்கத்தாவாலா என்பவர்கள். அடுத்து மதராசி. இப்படி அந்தக் காலத்தில் மொத்தம் 60 ஆயிரம் இந்தியர்கள் ஃபிஜிக்கு 5 ஆண்டு ஒப்பந்த அடிப்படையில் வேலை பார்க்க வந்துள்ளனர். இதில் 20 ஆயிரம் பேர் தாயகம் திரும்பிவிட்டனர். இப்போது இந்தத் தீவில் 40 லட்சம் மக்கள் வாழ்கிறார்கள். அதில் 4 லட்சம் பேர் இந்தியர்கள். இந்த நாட்டில் ஆட்சி மொழி மொத்தம் 3. அதில் பிஜியன் என்பது இந்த நாட்டு பூர்வகுடிகளின் மொழி. அடுத்து ஆங்கிலம். மூன்றாவது ஃபிஜி இந்தி. அப்படி என்றால் என்ன சந்தேகம் வருகிறது இல்லையா?
உபி, பீகாரிலிருந்து வந்த போஜ்பூரி மொழி திரிந்து உருவானதுதான் ஃபிஜி இந்தி என்பது. ஃபிஜி பொருளாதாரத்தில் முன்னேறிய நாடு. தங்க சுரங்கங்கள் அதிகம் உள்ளன. கரும்பு ஏற்றுமதி அதிகம் செய்கிறார்கள். நிறைய ஆறுகள் இருப்பதால் தண்ணீர் ஏற்றுமதியும் செய்கின்றனர். இங்குள்ள பழைய தலைமுறை தமிழர்கள் மட்டுமே தமிழ் மொழி பேசுகிறார்கள். இளம் தலைமுறை தமிழர்கள் அனைவரும் ஃபிஜி இந்திதான் பேசுகிறார்கள். தாய் மொழி மறந்துவிட்டார்கள். இந்த நாடியில் மிகப்பெரிய சிவ சுப்பிரமணிய ஸ்வாமி கோயில் ஒன்று உள்ளது. இந்தக் கோயில் தமிழர்கள் கட்டியது. இங்கே வாட்ச் மேன் பெயர் கிருஷ்ண மூர்த்தி. பூஜை சாமான் விற்பவர் பெயர் கந்தசாமி கவுண்டர். ஆனால், யாருக்கும் தமிழ் தெரியவில்லை"என்கிறார். இந்த முருகன் கோயிலுக்குச் சென்ற செந்தில் குமாருக்கு மிகப்பெரிய ஆச்சரியம் ஒன்று காத்திருந்தது. இங்குள்ள பூசாரி மோகன் என்பவர் குமாரின் வீடியோக்கள் நிறையப் பார்த்திருக்கிறார். மோகன் வாலாஜாபேட்டையில் இருந்து பிஜிக்கு சென்றுள்ளார்.
கடந்த 4 ஆண்டுகளாக இங்கே இவர் வசிக்கிறார். இந்தக் கோயிலைச் சாது குப்புசாமி கவுண்டர் என்பவர்தான் முயற்சி எடுத்துக் கட்டியுள்ளார். முருகன் கோயில் இல்லாமல் அம்மன் கோயிலும் இங்கே உள்ளது. அங்கே தீ மிதி திருவிழா நடக்கிறது. தை மாசம் காவடி திருவிழாவும் நடந்துவருகிறது. கூழ் ஊற்றும் வைபவமும் ஆண்டு தோறும் நடைபெறுகிறது. தலைநகரம் சுவாவில் ஒரு மாரியம்மன் கோயிலும் உள்ளது. அனைத்து கோயில்களும் ஒரு நிர்வாகத்தின் கீழாகவே செயல்படுகின்றனர். இங்குள்ள கோயிலுக்கு பெயிண்ட் அடிப்பது, கும்பாபிஷேகம் செய்வது என அனைத்து பணிகளுக்கும் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் தான் போய் செய்து வருகிறார்கள். இப்போது தமிழ் படிப்பதற்காக இந்திய அரசு சார்பில் 3 ஆசிரியர்களை நியமிக்க நடவடிக்கை எடுத்துள்ளது. அரசு மொழியாக இந்தி இருப்பதால் அதிகாரிகள், காவல்துறையினர் என அனைவரும் அரைகுறையான ஒரு இந்தியைப் பேசுகிறார்கள். சுத்தமான இந்தி என அதைச் சொல்ல முடியாது. தமிழைப் பொறுத்தவரைப் பெயருக்குப் பின்னால் ஒட்டிக் கொண்டுள்ள கவுண்டர், படையாச்சி என்பதை வைத்து அடையாளம் கண்டுபிடிக்க முடிகிறது. 'எப்படி இருக்கிறீர்கள்?' என்பதை இந்த மக்கள் 'எப்படி?' என்று சுருக்கி நலம் விசாரிக்கிறார்கள். அதை வைத்து முழு வாசகத்தை நாம் புரிந்து கொள்ள வேண்டிய நிலைதான் நிலவுகிறது என்கிறார் செந்தில் குமார்.
பெண்களின் மனம் கவர் ஆடையகம்
VASTHRALAYA SAREES (PVT) LTD
55F-1/3, Manning Place
Wellawatte colombo 06 Sri Lanka
T:P 0094776176709
#VASTHRALAYA SAREES
பெண்களின் மனம் கவர் ஆடையகம் விளம்பரம்
AKSWISSTAMIL வானொலி. 24 மணிநேர சேவையோடு உங்கள் கைபேசி ஆப்ஸ் வழியே இனைந்து இருக்க
Download
AKSWISSTAMILFM APPS android
https://play.google.com/store/apps/details?id=com.zendroid.akswiss 👈👈
AKSWISSTAMILFM APPS IPHONE
https://apps.apple.com/us/app/akswiss-tamil-fm/id1607446642?platform=iphone 👈
Post a Comment