எம்ஜிஆர் ஃபிலிம் இன்ஸ்டிட்யூட் தலைவராக பிரபல ஓவியக் கலைஞர் டிராட்ஸ்கி மருது நியமனம்! தமிழக அரசு ஆணை

எம்ஜிஆர் ஃபிலிம் இன்ஸ்டிட்யூட் தலைவராக பிரபல ஓவியக் கலைஞர் டிராட்ஸ்கி மருது நியமனம்! தமிழக அரசு ஆணை


        சென்னை: தமிழ்நாடு அரசு திரைப்பட மற்றும் தொலைக்காட்சி பயிற்சி நிறுவனத்தின் (எம்.ஜி.ஆர் ஃபிலிம் இன்ஸ்டிட்யூட்) தலைவராக ட்ராட்ஸ்கி மருது நியமனம் செய்யப்பட்டுள்ளார். தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை ஓவியர் டிராட்ஸ்கி மருதுவை எம்.ஜி.ஆர் ஃபிலிம் இன்ஸ்டிட்யூட் தலைவராக நியமித்து அரசாணை வெளியிட்டுள்ளது. சென்னை தரமணியில் உள்ள எம்ஜிஆர் அரசு திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி பயிற்சி நிறுவனம், முன்பு அடையார் திரைப்பட நிறுவனம் என்று அழைக்கப்பட்டது. இது ஆசியாவின் முதல் திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி பயிற்சி நிறுவனமாகும். 1945-ம் ஆண்டில் அடையாறு திரைப்பட நிறுவனமாக நிறுவப்பட்ட இது இந்தியாவின் முன்னோடி திரைப்பட பயிற்சி நிறுவனங்களில் ஒன்றாக மிகச்சிறந்த முறையில் பயிற்சிகளை அளித்து வருகிறது.


எம்.ஜி.ஆர் ஃபிலிம் இன்ஸ்டிட்யூட், தமிழ்நாடு மாநில அரசின் தகவல் மற்றும் மக்கள் தொடர்புத் துறையின் கீழ் மிகச் சிறப்பான முறையில் இயங்கி வருகிறது. திரைக்கதை மற்றும் இயக்கம், ஒளிப்பதிவு, ஒலிப்பதிவு மற்றும் ஒலி பொறியியல், திரைப்பட எடிட்டிங் மற்றும் திரைப்பட செயலாக்கம் போன்ற பயிற்சிகள் இங்கு வழங்கப்படுகின்றன. தமிழ்நாடு அரசு எம்ஜிஆர் திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி பயிற்சி நிறுவனத்தின் தலைவராக நடிகர் ராஜேஷ் கடந்த 2022 ஆம் ஆண்டு நியமனம் செய்யப்பட்டார். இந்நிலையில் இந்த நிறுவனத்தின் பணிகளை செம்மையாக தொடர்ந்து மேற்கொள்ள இந்நிறுவனத்தின் தலைவராக ட்ராட்ஸ்கி மருதுவை நியமனம் செய்து தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. டிராட்ஸ்கி மருது 1953 ஆம் ஆண்டு மதுரை பிறந்தவர். இளவயது முதலே ஓவியக் கலையில் ஆர்வம் கொண்டு, சுவர் ஓவியங்களை வரைந்தவர். உலகக் காண்பியல் தளத்தில் தமிழ் அடையாளத்தை முதன்மையாகப் பதிவு செய்தவர்களில் ஒருவராகவும், வெகுமக்கள் ஊடகங்களில் செயல்பட்டு நவீன ஓவியத்தைக் கொண்டுசென்றவராகவும் கருதப்படுகிறார். இந்தத் துறையில் கணினியைப் பயன்படுத்தியதில் முன்னோடியானவராகவும், இளங்கலைஞர்களை இயங்குபடத் துறையில் ஊக்கப்படுத்தி வளர்த்தவராகவும் கருதப்படுகிறார்.


பல்வேறு திரைப்படங்களில் கலை மற்றும் சிறப்புத்தோற்ற இயக்குநராகப் பணியாற்றியுள்ள டிராட்ஸ்கி மருது, ஜெயம் ரவி நடித்த 'பேராண்மை' திரைப்படத்தில் விஞ்ஞானி கேரக்டரில் நடித்திருந்தார். சீமான் இயக்கிய 'வாழ்த்துகள்' திரைப்படத்தில் நடிகர் மாதவனுக்கு அப்பாவாக கௌரவ வேடமேற்று நடித்தார் டிராட்ஸ்கி மருது. 1978ஆம் ஆண்டு தமிழ்நாடு அரசின் சிறந்த ஓவியர் விருதையும், 2007ஆம் ஆண்டு கலைமாமணி விருதையும் பெற்றுள்ளார் டிராட்ஸ்கி மருது.

Post a Comment

Previous Post Next Post

5

5

5

Girl in a jacket Girl in a jacket

5

5

HTML tutorial