தமிழரசுக் கட்சியின் வேட்பாளர் பட்டியலுக்குள் என்னை உள்வாங்க வேண்டும் என்று மாவை சேனாதிராஜா அறிவித்திருந்தார். எனினும், சுமந்திரன் அதனை நிராகரித்தார் என்று தமிழரசுக் கட்சியின் முன்னாள் கொழும்புக் கிளை தலைவரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான கே.வி.தவராசா தெரிவித்துள்ளார்.
பத்திரிகை ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலின் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
கடந்த 14 ஆண்டுகளாக நான் தமிழரசுக் கட்சியின் நியமனக் குழுவில் இடம்பெற்று வந்திருந்தேன். அந்த சமயத்தில் நான் தேர்தலில் போட்டியிடுவதற்கான விண்ணப்பத்தைச் செய்யவில்லை.
நியமனக் குழுவில் இருப்பவர்கள் தங்களைத் தாங்களே வேட்பாளர்களாக தெரிவு செய்கின்ற வழக்கம் தான் கட்சியில் கடந்த காலங்களில் நீடித்து வந்தது
அதனை பல தருணங்களில் சுட்டிக்காண்பித்த போதும் ஒருவரும் ஏற்றுக் கொள்ளவில்லை.
ஆனால் இம்முறை எனக்கு மட்டுமல்ல கொழும்புக் கிளைக்கே நியமனக்குழு அந்தஸ்து வழங்கப்படவில்லை. நியமனக்குழுவில் பதினொரு பேர் இருந்தனர். ஊடகங்கள் கூட சுமந்திரனிடத்தில் அவர்களின் விபரங்களைக் கேட்டபோது வெளிப்படுத்த மறுத்திருந்தார். அதற்கு காரணம் பெரும்பான்மையானர்வகள் அவரின் ஆதரவாளர்கள் தான்.
அப்படியொரு நிலையில் விண்ணப்பங்கள் பரிசீலணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது என்னையும், அகிலன் முத்துக்குமாரசுவாமியையும், சசிகலா ரவிராஜையும் வேட்பாளர்களாக அறிவிக்க வேண்டும் என்று கட்சியின் தலைவரான சேனாதிராஜா அறிவித்திருந்தார்.
ஆனால் சுமந்திரன் அதனை நிராகரித்தார். குறிப்பாக நான் ஊர்காவற்துறை தொகுதியை மையப்படுத்தி யாழ்ப்பாணத்தில் போட்டியிடுவதற்கு விரும்பினேன். ஆனால் எனக்கு கொழும்பில் போட்டியிடுமாறு கூறப்பட்டது. கொழும்பைப் பொறுத்த வரையில் எமது நட்பு சக்திகளான மலையகக் கட்சிகளே களமிறங்குகின்றன.
மனோகணேசன் போன்ற ஒருவரே கொழும்பில் வெற்றிபெற முடியும். ஆகவே அப்படியொரு பிரதிநிதித்துவத்தினை என்னால் சிதைக்க முடியாது என்று கூறினேன். எனது கருத்தினைக் கேட்கவில்லை. விரும்பினால் போட்டியிடுங்கள் இல்லையென்றால் விடுங்கள் என்ற வகையில் தான் பதிலளிக்கப்பட்டது என்று குறிப்பிட்டுள்ளார்.
AKSWISSTAMIL வானொலி. 24 மணிநேர சேவையோடு உங்கள் கைபேசி ஆப்ஸ் வழியே இனைந்து இருக்க
Download
AKSWISSTAMILFM APPS android
https://play.google.com/store/apps/details?id=com.zendroid.akswiss 👈👈
AKSWISSTAMILFM APPS IPHONE
https://apps.apple.com/us/app/akswiss-tamil-fm/id1607446642?platform=iphone 👈👈
பெண்களின் மனம் கவர் ஆடையகம்
VASTHRALAYA SAREES (PVT) LTD
55F-1/3, Manning Place
Wellawatte colombo 06
Sri Lanka
#VASTHRALAYA SAREES
பெண்களின் மனம் கவர் ஆடையகம் விளம்பரம்
Post a Comment