மாத்தறை பகுதியில் சட்டவிரோத ஆயுத உற்பத்தி நிலையமொன்றில் நேற்று (24) மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது சந்தேகநபர்கள் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஆயுத உற்பத்தி நிலையத்தில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது 63 வயதுடைய நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையை அடுத்து, அகங்கம பகுதியில் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட இரண்டு துப்பாக்கிகளுடன் இரண்டு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இது தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது,
ஆயுத கிடங்கில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில், துப்பாக்கி, 9 மிமீ துப்பாக்கியின் ஐந்து தோட்டாக்கள், ஒரு வெல்டிங் இயந்திரம் மற்றும் பல்வேறு உபகரணங்களை அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்டன.
சந்தேகநபரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் அவர் இரண்டு துப்பாக்கிகளை விற்பனை செய்துள்ளமை கண்டறியப்பட்டது.
அதன் பின்னர், குறித்த துப்பாக்கிகளை கொள்வனவு செய்தவர்களை மாத்தறை பொலிஸார் கண்டு பிடித்ததுடன், ஆயுதங்களுடன் அவர்களை கைது செய்தனர்.
இதன்போது, கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் 47 மற்றும் 54 வயதுடைய அஹங்கம பகுதியைச் சேர்ந்தவர்கள்.
சந்தேகநபர்கள், கைப்பற்றப்பட்ட ஆயுதங்கள் மற்றும் பொருட்களுடன் மாத்தறை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
அதேநேரம், இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மாத்தறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்
பெண்களின் மனம் கவர் ஆடையகம்
VASTHRALAYA SAREES (PVT) LTD
55F-1/3, Manning Place
Wellawatte colombo 06 Sri Lanka
T:P 0094776176709
#VASTHRALAYA SAREES
பெண்களின் மனம் கவர் ஆடையகம் விளம்பரம்
AKSWISSTAMIL வானொலி. 24 மணிநேர சேவையோடு உங்கள் கைபேசி ஆப்ஸ் வழியே இனைந்து இருக்க
Download
AKSWISSTAMILFM APPS android
https://play.google.com/store/apps/details?id=com.zendroid.akswiss 👈👈
AKSWISSTAMILFM APPS IPHONE
https://apps.apple.com/us/app/akswiss-tamil-fm/id1607446642?platform=iphone 👈
Post a Comment