எதிர்காலத்தில் ஆண் குழந்தைகளே பிறக்காதா?

 






மனிதர்களை ஆண்கள் பெண்கள் என தீர்மானிப்பது குரோமோசோம்கள் ஆகும். பெண்களுக்கு XX குரோமோசோம்களும் , ஆண்களுக்கு XY குரோமோசோம்களும் உள்ள நிலையில் ஆண்தன்மையை தீர்மானிக்கும் Y குரோமோசோம்கள் சுருங்கி வருவதாக புதிய ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. 

X குரோமோசோம்கள் Y குரோமோசோம்களுடன் சேரும்பொழுது ஆண் குழந்தைகள் பிறக்கின்ற நிலையில் அவற்றின் அழிவினால், வருங்காலங்களில் ஆண் குழந்தைகளே பிறக்காத நிலை ஏற்பட்டு அது இனப்பெருக்க சுழற்சியை உடைக்கலாம்.

தொடக்கத்தில் மனிதனில் உள்ள Y குரோமோசோம்களில் 1,438 மரபணுக்கள் இருந்த நிலையில் கடந்த 300 மில்லியன் ஆண்டுகளில் அவற்றில் 1,393 மரபணுக்கள் அழிந்துவிட்டது. 

தற்போது Y குரோமோசோம்களில் 40 மரபணுக்கள் மட்டுமே மிச்சமுள்ளது. இந்த நிலை தொடர்ந்தால் அடுத்த 11 மில்லியன் ஆண்டுகளில் அவை மொத்தமாக அழிந்துவிடும் என்று விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.

எனவே 11 மில்லியன் ஆண்டுகள் கழித்து என்ன நடக்கும் என்ற கேள்விக்கும் விஞ்ஞானிகள் பதில் வைத்துள்ளனர். 

அதாவது, ஸ்பைனி எலிகளை வைத்து ஆராய்ச்சி செய்தபோது, அவற்றில் Y குரோமோசோம்கள் முற்றிலுமாக அழிந்த பிறகு புதிய வகையான குரோமோசோம்கள் பரிணமித்துள்ளது கண்டறியப்பட்டது. 

Post a Comment

Previous Post Next Post

5

5

5

Girl in a jacket Girl in a jacket

5

5

HTML tutorial