சென்னையில் 1,500 விநாயகர் சிலைகள் கடந்த 7 ஆம் திகதி பூஜைக்காக வைக்கப்பட்டன. இந்த சிலைகளில் ஒரு பகுதி கடந்த 11 ஆம் திகதி ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு கடலில் கரைக்கப்பட்டது.
நூற்றுக்கும் மேற்பட்ட சிலைகள் கரைக்கப்பட்ட நிலையில் நேற்று மற்றும் இன்று விநாயகர் சிலைகள் அதிக எண்ணிக்கையில் கரைக்கப்பட்டு வருகின்றன. இன்று 1,300 சிலைகளுடன் பிரமாண்ட விநாயகர் சிலை ஊர்வலம் நடைபெற்றது.
சிலைகள் கரைப்பதற்கு இன்று கடைசி நாள் என்பதால் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பட்டினப்பாக்கம், நீலாங்கரை, காசிமேடு, திருவொற்றியூர் ஆகிய 4 இடங்களில் சென்னை மாநகரில் வைக்கப்பட்டுள்ள சிலைகளை கரைக்கப்படுகின்றன.
Post a Comment