இலங்கைச் சிறுவர்கள் இளைஞர்களுக்கு ஏற்பட்ட ஆபத்து

 








மனநல நோய்க்குரிய அறிகுறிகளுடன் பதுளை போதனா வைத்தியசாலைக்கு வருகை தரும் சிறுவர்கள் மற்றும் இளைஞர், யுவதிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக பதுளை வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப்பிரிவின் சிரேஷ்ட வைத்தியர் பாலித ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

மனநல நோய்க்குரிய அறிகுறிகளுடன் நாளாந்தம் 4 முதல் 5 சிறுவர்களும், 3 முதல் 4 இளைஞர் யுவதிகளும் வைத்தியசாலைக்கு வருகை தருகின்றனர்.

மயக்கம், வேகமாகச் சுவாசித்தல், நெஞ்சு வலி, கை கால் மரத்துப் போதல், கை கால் விரல்கள் இழுத்தல், சுவாசிப்பதற்குச் சிரமம் ஏற்படல், அதிகமாக வியர்வை வெளியேறுதல் மற்றும் தூக்கமின்மை உள்ளிட்டவை மனநல நோய்க்குரிய அறிகுறிகளாகும்.

இது பெரும்பாலும் 'Panic Attack'  என அழைக்கப்படுகின்றது. 

அதிகளவான அச்சம், வாழ்க்கை தொடர்பான அச்சம், சமாளிக்க முடியாத சூழ்நிலைகள் தொடர்பான அச்சம்  காரணமாக இந்த Panic Attack'  ஏற்படலாம். 

எனவே, இத்தகைய நோய் அறிகுறிகள் காணப்படுபவர்கள் உடனடியாக வைத்தியசாலைக்குச் செல்லுமாறு அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Post a Comment

Previous Post Next Post

5

5

5

Girl in a jacket Girl in a jacket

5

5

HTML tutorial