சூப்பர் ஹிட் படத்தின் இரண்டாம் பாகத்தை அறிவித்த இயக்குனர் பார்த்திபன்

  





இயக்குனர் பார்த்திபன் கடந்த ஆண்டு இரவின் நிழல் என்ற வித்தியாசமான திரைப்படத்தை எடுத்து வெளியிட்டார். 


இந்த படம் மொத்தமும் ஒரே ஷாட்டில் எடுக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இதையடுத்து அவர் இயக்கியுள்ள டீன்ஸ் என்ற படம் இந்தியன் 2 படத்தோடு ரிலீஸ் ஆனது.


அதனால் முதல் நாளில் இந்த படத்துக்கு பெரியளவில் ரசிகர்கள் கூட்டம் இல்லை. ஆனால் இந்தியன் 2 படத்துக்கு தொடர்ந்து நெகட்டிவ் விமர்சனங்கள் கிடைக்க ஆரம்பித்துள்ள நிலையில் மெல்ல மெல்ல இந்த படத்துக்கான காட்சிகள் பல மல்ட்டிப்ளக்ஸ் திரையரங்குகளில் காட்சிகள் அதிகமாக்கப்பட்டுள்ளன. இப்போது படத்துக்கு டீசண்டான கூட்டம் வர ஆரம்பித்துள்ளது.


இந்நிலையில் பார்த்திபன் தன்னுடைய அடுத்த படம் என்ன என்பது பற்றி சமீபத்தில் பேசியுள்ளார். அதில் “அடுத்து நான் புதிய பாதை 2 எடுக்கப் போகிறேன். அந்த கதையோட தொடர்ச்சி இது இல்லை. அதே கதைதான். உலக சினிமா வரலாற்றிலேயே இதுபோல ஒரே கதாபாத்திரத்தில் இரண்டு முறை நடிக்கும் நடிகன், நான்தான். எனக் கூறியுள்ளார்.

Post a Comment

Previous Post Next Post

5

5

5

Girl in a jacket Girl in a jacket

5

5

HTML tutorial