கொழும்பு துறைமுகம் நோக்கி பயணித்து கொண்டிருந்த சரக்கு கப்பலில் ஏற்பட்ட தீ பரவல் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக இந்திய கடலோர பாதுகாப்பு படை தெரிவித்துள்ளது.
கடந்த 19ம் தேதி கோவா கடற்கரையில் இருந்து சுமார் 102 கடல் மைல் தொலைவில் உள்ள கடல் பகுதியில் பயணித்துக் கொண்டிருந்த போது கப்பலில் தீ விபத்து ஏற்பட்டது.
ஆபத்தான இரசாயனங்கள் உட்பட 1,154 கொள்கலன்களை ஏற்றிச் சென்ற கப்பலில் ஏற்பட்ட தீ விபத்தில் பணியாளர் ஒருவர் உயிரிழந்ததுடன், மீதமுள்ள பணியாளர்களை பத்திரமாக மீட்கும் பணியில் இந்திய கடற்படையினர் ஈடுபட்டனர்.
தீயை கட்டுப்படுத்த இந்திய கடற்படையின் 4 கப்பல்கள் மற்றும் ஹெலிகொப்டர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக இந்திய கடலோர பாதுகாப்பு படை தெரிவித்துள்ளது.
தற்போது தீ பரவுவது கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாகவும், இது போன்ற கப்பலில் ஏற்படும் தீயை முழுமையாக கட்டுப்படுத்த 3 முதல் 4 நாட்கள் வரை ஆகும் என கூறப்படுகிறது.
Post a Comment