ஹம்பாந்தோட்டை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சிப்பிக்குளம பகுதியில் நேற்று மாலை பாடசாலை மாணவர் ஒருவர், மற்றுமொரு பாடசாலை மாணவரை தாக்கியுள்ள சம்பவம் பதிவாகியுள்ளது.
தாக்குதலுக்கு உள்ளாகி ஹம்பாந்தோட்டை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு அவசர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த மாணவன் உயிரிழந்தமை தொடர்பில் கிடைத்த முறைப்பாட்டின் அடிப்படையில் விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
ஹம்பாந்தோட்டை, பெத்தேவெல பகுதியில் வசிக்கும் 15 வயதுடைய பாடசாலை மாணவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
Post a Comment