வீடுகளுக்கு அடுத்த மாதம் முதல் மின் கட்டணம் இவ்வளவு உயரப்போகிறதா? மின் வாரியம் விளக்கம் அளிக்குமா?

வீடுகளுக்கு அடுத்த மாதம் முதல் மின் கட்டணம் இவ்வளவு உயரப்போகிறதா? மின் வாரியம் விளக்கம் அளிக்குமா?

சென்னை: வீடுகள் மற்றும் கடைகள், தொழில் நிறுவனங்களுக்கு அடுத்த மாதம் முதல் மின் கட்டணம் உயரப்போவதாக சமூக ஊடகங்களிலும், சில செய்தி நிறுவனங்களிலும் செய்திகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பா தமிழ்நாடு மின்சார வாரியம் விளக்கம் அளிக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் பிறப்பித்திருக்கும் ஆணையின்படி, வரும் ஜூலை ஒன்றாம் தேதி முதல் வீடுகள் மற்றும் வணிக நிறுவனங்களுக்கான மின்சாரக் கட்டணத்தை உயர்த்த தமிழக அரசின் சார்பில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக செய்திகள் வெளியாகி உள்ளது. மின்சாரக் கட்டணத்தை உயர்த்த தமிழ்நாடு அரசு திட்டமிட்டிருப்பதாகவும் சமூக ஊடகங்களில் செய்திகள் பரவி வருகின்றன.



தமிழ்நாட்டில் மின்சாரக் கட்டணத்தை உயர்த்தி 2022-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் பிறப்பித்து. அதன்பிறகு ஒவ்வொரு ஆண்டும் ஜூலை மாதம் ஒன்றாம் தேதியிலிருந்து மின்சாரக் கட்டணம் உயர்த்தப்பட வேண்டும் இதுவே விதி. ஒவ்வொரு நிதியாண்டின் ஏப்ரல் மாதத்திற்கான பண வீக்க விகிதம் அல்லது 6 விழுக்காடு இவற்றில் எது குறைவோ அந்த அளவுக்கு மின்கட்டணம் உயர்த்தப்பட வேண்டும் என்ற உத்தரவினை மின்சார ஒழுங்குமுறை ஆணையம் பிறப்பித்துள்ளது அதன்படி நடப்பாண்டின் ஏப்ரல் மாத பணவீக்க அளவான 4.38 விழுக்காடு அளவுக்கு மின்சாரக் கட்டணத்தை உயர்த்த வேண்டிய நிலை இருக்கிறது. இதன் படி மின் கட்டணத்தை உயர்த்தினால்அதனால் யூனிட்டுக்கு 50 காசுகள் வரை மின்சாரக் கட்டணம் உயரும் என்கிற நிலை இருக்கிறது. 2022ல் உயர்த்தப்பட்ட கட்டணம் 2023ம் ஆண்டு முதல்வர் ஸ்டாலினின் உத்தரவு காரணமாக உயர்த்தப்படவில்லை. இந்நிலையில் 2024ம் ஆண்டிலும் மின் கட்டணத்தை உயர்த்தக் கூடாது என்று பொதுமக்கள் வலியுறுத்தியுள்னர். “வீரப்பன் இருந்திருந்தால் வேற மாதிரி இருந்திருக்கும்”  கடைசியாக தமிழகத்தில் 2022ல் மின் கட்டணம் உயர்த்தப்பட்டது அதன்படி மின் கட்டணம் எவ்வளவு என்பதை பார்ப்போம். தமிழகத்தில் வீடுகளுக்கான மின்சாரத்தில் 100 யூனிட் வரை இலவசமாகும். அதற்கு மேல் பயன்படுத்தும் ஒவ்வொருயூனிட் மின்சாரத்துக்கும் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. அதன்படி பார்த்ததால் 100 முதல் 200 யூனிட் வரை, 200 முதல் 500 யூனிட்வரை, 500 யூனிட்டிற்கு மேல் என்று பல விகிதங்களில் மின்கட்டணம் இருக்கிறது.
100 யூனிட்க்கு 0 கட்டணம், 110 யூனிட்டுக்கு 35 ரூபாய் கட்டணம், 200 யூனிட்டுக்கு 170 ரூபாய் கட்டணமும், 210 யூனிட்டுக்கு 260 ரூபாய் கட்டணம், 290 யூனிட்டுக்கு 500 ருபாய் கட்டணமும், 390 யூனிட்டுக்கு 800 ரூபாய் கட்டணமும் வசூலிக்கப்படுகிறது. அதேநேரம் 500 யூனிட்டுக்கு 1130 ரூபாய் கட்டணம், 510 யூனிட்டுக்கு 1846 ரூபாய் கட்டணமும். 600 யூனிட்டுக்கு 2440 ரூபாய், 700 யூனிட்டுக்கு 3100 ரூபாய், 800 யூனிட்டுக்கு 3760 ரூபாய் கட்டணமும், 1000 யூனிட்டுக்கு 5080 ரூபாய், 1200 யூனிட்டுக்கு 6400 ரூபாய் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. தற்போது யூனிட்டுக்கு 50 காசுகள் வரை மின்சாரக் கட்டணம் உயர்த்தினால் மின் கட்டணம் கணிசமாக உயரும் வாய்ப்பு உள்ளது. இதற்கு பொதுமக்களும், அரசியல் கட்சிகளும் கடும் எதிர்ப்பு தெரிரவித்துள்ளன. இதுபற்றி தமிழ்நாடு மின்சார வாரியம் விளக்கம் அளிக்கவேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர்.


Previous Post Next Post

5

5

5

Girl in a jacket Girl in a jacket

5

5

HTML tutorial