லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்த விக்ரம் படத்தின் கிளைமாக்ஸ் காட்சியில் ரோலக்ஸ் வில்லனாக சூர்யா கேமியோ ரோலில் நடித்திருந்தார். ஆனால், தற்போது கமல்ஹாசனின் இந்தியன் 2 படத்துக்கு ரியல் வில்லனாகவே சூர்யா மாறிவிட்டார் எனக் கூறுகின்றனர்.
அதற்கு காரணம் இந்தியன் 2 படத்துக்கு எதிராக சூர்யா தயாரித்துள்ள பிரம்மாண்ட திரைப்படம் வெளியாக காத்திருப்பது தான் என்றும் கமல்ஹாசன் ரசிகர்கள் தற்போது சோசியல் மீடியாவில் சூர்யாவின் முடிவுக்கு எதிராக கமெண்ட்டுகளை பதிவிட்டு வருகின்றனர்.
இந்தியன் 2 படம் பான் இந்தியா அளவில் ரிலீசாக உள்ள நிலையில் சூர்யாவின் படம் அதற்கு இடையூறாக நிச்சயம் இருக்கும் என்று கூறுகின்றனர்.
திடீரென சூர்யா கமல்ஹாசனுக்கு எதிராக மாறியது ஏன் என்கிற கேள்விகளும் எழுந்துள்ளன. ரோலக்ஸ் சூர்யா: லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன், விஜய் சேதுபதி, பகத் பாசில் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற விக்ரம் திரைப்படத்தின் கிளைமேக்ஸ் காட்சியில் ரோலக்ஸ் கதாபாத்திரத்தில் மிரட்டல் வில்லனாக போதைப்பொருள் கடத்தல் தலைவனாக சூர்யா நடித்திருப்பார்.
விக்ரம் 3 படத்தில் கமலுக்கும் சூர்யாவுக்கும் இடையே சண்டை நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், கமலுக்கு ரியல் வில்லனாகவே மாறிவிட்டாரா சூர்யா என்கிற கேள்விகள் எழுந்துள்ளன.
சூரரைப் போற்று இந்தி ரீமேக்: சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா, அபர்ணா பாலமுரளி நடிப்பில் வெளியான சூரரைப் போற்று திரைப்படம் தேசிய விருதுகளை குவித்தது.
சிறந்த நடிகர், சிறந்த நடிகை என பல விருதுகளை அந்த படம் குவித்த நிலையில் அந்தப் படத்தின் இந்தி ரீமேக்கில் அக்ஷய் குமார் நடித்துள்ளார். சுதா கொங்கரா இயக்கத்தில் உருவாகியுள்ள அந்த படத்தை சூர்யா தயாரித்துள்ளார்.
தற்போது சூரரைப் போற்று இந்தி ரீமேக் படமான சர்ஃபிரா படத்தின் ரிலீஸ் தேதியை சூர்யா வெளியிட்டுள்ளார்.
Post a Comment