இந்த நாட்களில் கோழி இறைச்சியை கொள்வனவு செய்யும் போது அதிக கவனம் செலுத்தப்பட வேண்டுமென நுகர்வோர் விவகார அதிகார சபை தெரிவித்துள்ளது.
வெள்ள நிலைமை காரணமாக, வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்த கோழிக்குஞ்சுகளே இன்றைய நாட்களில் சந்தையில் விற்பனை செய்யப்படுவதாக அதன் சோதனைகள் மற்றும் புலனாய்வுப் பிரிவின் பணிப்பாளர் சஞ்சய இரசிங்க தெரிவித்தார்.
இவ்வாறான கோழி இறைச்சியை உட்கொள்வது உடலுக்கு தீங்கு விளைவிப்பதால், அதில் அதிக கவனம் செலுத்த வேண்டும் என சஞ்சய இரசிங்க கூறுகிறார்.
Post a Comment