இலங்கையில் செய்மதி தொழில்நுட்பத்தின்ஊடாக இணைய வசதி சேவையை வழங்குவதற்கு "Starlink" க்கு இலங்கை தொலைத் தொடர்புகள் சீர்திருத்த ஆணைக்குழு முழமையான அனுமதியை வழங்கியுள்ளதாக தொழில்நுட்ப இராஜாங்க அமைச்சர் கனக ஹேரத் தெரிவித்துள்ளார்.
உலக பணக்காரரான ELON MUSK இன் நிறுவனமான SPACE X வழங்கும் அதிவேக இணைய சேவையான STARLINK இணைப்பினை இலங்கையில் பெற வேண்டுமானால் ஆரம்ப தொகையாக (ரூ 120,000-ரூ 180,000) இனையும் மேலும் மாதாந்தம் ரூ30,000ம் செலுத்த வேண்டும் என இலங்கை தொலைத்தொடர்பு ஆணைக்குளு பணிப்பாளர் மதுசங்க திசாநாயக தெரிவித்துள்ளார்
இந்த இணைய சேவை வசதிக்கான அங்கீகாரத்துக்கா பொதுமக்களின் கருத்துக்களைப் பெறுவதற்கு 14 நாட்கள் கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாகவும் அதன் பின்னர் தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணைக்குழுவினால் இந்த இணைய சேவையை இலங்கையில் நடைமுறைப்படுத்த முடியும் எனவும் இராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
ஜனாதிபதி ஊடக மையத்தில் நேற்று (06) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட தொழில்நுட்ப இராஜாங்க அமைச்சர் கனக ஹேரத் இந்தக் கருத்துக்களை வெளியிட்டார்.
கல்வி, ஆராய்ச்சி மற்றும் மீன்பிடித் துறைகளுக்கு வேகமான இணையச் சேவையை வழங்க முடியும் என்றும், உலகில் எங்கிருந்தும் இந்த இணைய வசதியைப் பெறுவதற்கான வாய்ப்பும் இருப்பதாகவும் இராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டார்.
Post a Comment