தெற்கு இத்தாலியில் இரண்டு கப்பல் விபத்துகளில் 11 புலம்பெயர்ந்தோர் இறந்துள்ளதுடன் 64 பேர் காணவில்லை என இத்தாலிய கடலோர காவல்படை தெரிவித்துள்ளது.
நாதிர் மீட்புக் கப்பலை இயக்கும் ஜேர்மன் உதவிக் குழுவானது மூழ்கிக் கொண்டிருந்த மரப் படகில் இருந்து 51 பேரை எடுத்ததாகவும், அதில் மயக்கமடைந்த இருவர் உட்பட, கப்பலின் கீழ் தளத்தில் 11 உடல்கள் சிக்கியிருந்ததாகவும் தெரிவித்துள்ளது.
இதேவேளை 8 நாட்களுக்கு முன்னர் துருக்கியில் இருந்து புறப்பட்ட படகு தீப்பிடித்து கவிழ்ந்ததால், 64 பேர் கடலில் காணாமல் போயுள்ளனர் என்றும், 11 பேர் மீட்கப்பட்டு, இத்தாலிய கடலோரக் காவல்படையினரால் கலாப்ரியன் நகரமான ரோசெல்லா அயோனிகாவுக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது
Post a Comment