பிரித்தானியாவுக்குள் நுழையும் முயற்சியில், 84 புகலிடக் கோரிக்கையாளர்களுடன் பயணித்த சிறுபடகொன்று ஆங்கிலக்கால்வாயில் கவிழ்ந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
பிரித்தானிய அரசு புலம்பெயர்தலைக் கட்டுப்படுத்த முயற்சிகளை மேற்கொண்டாலும், ஆங்கிலக்கால்வாயைக் கடந்து பிரித்தானியாவுக்குள் நுழைய முயலும் புலம்பெயர்ந்தோர் சற்றும் தங்கள் முயற்சியை தொடர்கின்றனர்.
இன்று காலை, 84 புகலிடக் கோரிக்கையாளர்களுடன் சிறுப டகொன்று பிரான்ஸிலிருந்து புறப்பட்டுள்ளது.
அந்தப் படகு ஆங்கிலக்கால்வாயில் பயணித்துக்கொண்டிருக்கும்போது, திடீரென அதன் இயந்திரம் பழுதடைந்துள்ளது.
ஆகவே, மீண்டும் திரும்பி பிரான்சுக்கே சென்றுவிடலாம் என முடிவு செய்து படகை செலுத்தியோர் அதனை திருப்பும்போது, எதிர்பாராமல் அந்த படகு கவிழ்ந்ததாக, அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
குறித்த படகில், ஒரு ஆறு மாதக் குழந்தை உட்பட மூன்று சிறுவர்களும் பயணித்துள்ளார்கள்.
படகு கவிழ்ந்து அதிலிருந்தவர்கள் தண்ணீரில் தத்தளித்த நிலையில், தகவலறிந்து வந்த பிரான்ஸ் படகொன்று அவர்களை மீட்டுள்ளது.
இந்த விபத்தில் யாருக்கும் உயிர்ச்சேதம் ஏற்பட்டவில்லை என கூறப்படுகிறது.
Post a Comment