இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கருக்கு தமிழ்நாட்டு முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
தமிழக அரசு சார்பில் வெளியிட்ட செய்திக்குறிப்பில்,
இலங்கைக் கடற்படையினரால் நேற்று (18) கைது செய்யப்பட்டுள்ள தமிழ்நாட்டைச் சேர்ந்த நான்கு மீனவர்களை உடனடியாக விடுவிக்க மத்திய அரசு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென வலியுறுத்தி முதல்வர் மு.க.ஸ்டாலின் மத்திய வெளிவிவகார அமைச்சர் அமைச்சர் எஸ்.ஜெய்சங்கருக்கு கடிதம் எழுதியுள்ளார்.
அந்த கடிதத்தில் புதுக்கோட்டை மாவட்டம், கோட்டைப்பட்டினம் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து IND-TN-08-MM-05 என்ற பதிவு எண் கொண்ட விசைப்படகில் மீன்பிடிக்கச் சென்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த நான்கு மீனவர்கள் இலங்கைக் கடற்படையினரால் 18-6-2024 அன்று கைது செய்யப்பட்டு, அவர்களது மீன்பிடி படகுகளும் கைப்பற்றப்பட்டுள்ளன.
இத்தகைய சம்பவங்கள் மீனவர்களின் வாழ்வாதாரத்தை சீர்குலைப்பதோடு மட்டுமல்லாமல், மீனவ சமுதாயத்தினரிடையே அச்ச உணர்வையும், நிச்சயமற்ற தன்மையையும் ஏற்படுத்துவதாகவும் தெரிவித்துள்ளார்.
Post a Comment