சூப்பர் ஸ்டார் இப்போது வேட்டையன் படத்தில் நடித்து முடித்துவிட்டார். ஜெய் பீம் ஞானவேல் இயக்கத்தில் லைக்கா பிரம்மாண்டமாக தயாரித்திருக்கும் இப்படம் அக்டோபர் 10ம் தேதி வெளி வருகிறது.
இதில் சூப்பர் ஸ்டார் உடன் இணைந்து அமிதாப் பச்சன், பகத் பாசில், ராணா டகுபதி, மஞ்சு வாரியர் என பல பிரபலங்கள் நடித்துள்ளனர். அதனாலேயே இப்படத்திற்காக ரசிகர்கள் மரண வெய்ட்டிங்கில் இருக்கின்றனர்.
அதைத்தொடர்ந்து படத்தின் அப்டேட்டை ரசிகர்கள் கேட்ட வண்ணம் இருந்தனர். ஆனால் ஸ்கிரிப்ட் வேலைகள் இருந்ததால் சிறிது காலம் எடுத்துக் கொண்ட லோகேஷ் தற்போது தலைவருக்கு ஆக்சன் சொல்ல தயாராகி விட்டார்.
அதன்படி இப்போது அவர் தலைவருக்கு லுக் டெஸ்ட் செய்த போட்டோவை வெளியிட்டு ஜூலை மாதத்தில் இருந்து சூட்டிங் தொடங்கும் என அறிவித்துள்ளார். இதை ரஜினி ரசிகர்கள் ஆரவாரமாக கொண்டாடி வருகின்றனர்.
மேலும் அந்த போட்டோவில் ரஜினி கழுத்தில் ருத்ராட்சம் கண்ணில் கூலிங் கிளாஸ், கருப்பு உடை என படு ஸ்டைலாக அமர்ந்திருக்கிறார். கிட்டத்தட்ட காலா படத்தில் பார்த்தது போன்ற தோற்றத்தில் உள்ளார்.
அவரை லோகேஷ் செல்போனில் போட்டோ எடுக்கிறார். அந்தப் புகைப்படம் தான் தற்போது வெளியாகி உள்ளது. பார்ப்பதற்கு க்யூட்டாக இருக்கும் இந்த போட்டோவை ரசிகர்கள் அதிவேகமாக ஷேர் செய்து வருகின்றனர்.
Post a Comment