இலங்கையின் அனைத்துப் பகுதிகளும் மிகப் பெரிய புவிநடுக்கத்திற்கான வாய்ப்பைக் கொண்டுள்ளன என்பது நிஜம் என யாழ்.பல்கலைக்கழக புவியியற்துறை விரிவுரையாளர் நாகமுத்து பிரதீபராஜா எச்சரித்துள்ளார்.
நேற்றையதினம் இரவு சிறிய அளவிலான நில அதிர்வு உணரப்பட்டதை தொடர்ந்து நில அதிர்வு தொடர்பாக நாகமுத்து பிரதீபராஜா தனது முகப்புத்தக பதிவில் விளக்கியுள்ளார்
இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்
இலங்கையின் நிலப்பகுதிகளிலும், இலங்கையை அண்மித்த கடல் பகுதிகளிலும் கடந்த 05 ஆண்டுகளில் 29 நில அதிர்வுகள் அதிகாரபூர்வமாக பதிவு செய்யப்பட்டுள்ளன.
இவை புவி நடுக்க பதிவு கருவியில் (Seismograph) குறைந்த அளவுத் திட்டத்தில் ( ரிக்டர்) இருந்தாலும் கூட , இவை நாம் ஒரு மிகப்பெரிய புவி நடுக்க வாய்ப்பைக் கொண்டிருக்கின்றோம் என்பதனை வெளிப்படுத்துகின்றன.
Post a Comment