நாளை 15 மணித்தியாலங்களுக்கு நீர் விநியோகம் தடைப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி நாளை காலை 9.00 மணி முதல் நள்ளிரவு 12.00 மணி வரை நீர் விநியோகம் தடைப்படும் என தெரிவிக்கப்படுகிறது.
கொழும்பு, தெஹிவளை, கோட்டை, கடுவலை மாநகர சபைக்குட்பட்ட பகுதிகள், மஹரகம, பொரலஸ்கமுவ, கொலன்னாவ நகரசபை பகுதிகள், கொட்டிகாவத்தை, முல்லேரியா பிரதேச சபைக்குட்பட்ட பகுதிகளில் 15 மணித்தியாலங்களுக்கு நீர் விநியோகம் தடைப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அம்பத்தளை நீர் சுத்திகரிப்பு நிலையத்தின் அத்தியாவசிய புனரமைப்பு பணிகள் காரணமாகவும், நீர் சுத்திகரிப்பு முறையின் பராமரிப்பு பணிகள் காரணமாகவும், அம்பத்தளை நீர் சுத்திகரிப்பு நிலையத்தின் மின்சார விநியோகம் தடைப்பட்டுள்ளதால், இவ்வாறு நீர் விநியோகம் தடைப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Post a Comment