ரயில் லொக்கோமோட்டிவ் இயந்திர பொறியியலாளர்கள் சங்க சாரதிகளின் பணிப்புறக்கணிப்பு காரணமாக கோட்டை ரயில் நிலையத்தில் இருந்து புறப்படும் 8 புகையிர சேவைகள் இன்று இரத்துச் செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
ரயில் லொக்கோமோட்டிவ் (Locomotive) இயந்திர பொறியியலாளர்கள் சங்க சாரதிகள் பல கோரிக்கைகளை முன்வைத்து நேற்று நள்ளிரவு முதல் பணிப்புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இவர்களின் இந்த பணிப்புறக்கணிப்பு போராட்டம் காரணமாக கோட்டை ரயில் நிலையத்தில் இருந்து புறப்படும் 8 புகையிரத சேவைகள் இன்று இரத்துச் செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதனால், பயணிகள் கடுமையான அசௌகரியங்களுக்கும் முகம் கொடுத்து வருகின்றனர்.
இரண்டாம் தர பதவி உயர்வு, சம்பளப் பிரச்சினைகள் உள்ளிட்ட பல பிரச்சினைகளை அடிப்படையாகக் கொண்டே இந்த வேலை நிறுத்தத்தப் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
Post a Comment