குறைந்த வருமானம் பெறுவோருக்கு மனித பாவனைக்கு தகுதியற்ற அரிசி?








 அரசாங்க மானியத் திட்டத்தின் கீழ் கலென்பிதுனுவெவ பிரதேசத்திலுள்ள இரண்டு கிராம உத்தியோகத்தர் பிரிவுகளில் வசிக்கும் குறைந்த வருமானம் பெறுபவர்களுக்கு விநியோகிப்பதற்காக லொறியில் கொண்டு வரப்பட்ட 30,000 கிலோ அரிசியை கலென்பிதுனுவெவ பொதுச் சுகாதார பரிசோதகர்கள் சோதனையிட்டுள்ளனர்.

கலென்பிதுனுவெவ பிரதேச செயலகத்திற்கு அரிசி கொண்டு வரப்பட்ட போது, ​​அரிசியை விநியோகிப்பதற்கு முன்னர் அதன் தரத்தை பரிசோதிக்குமாறு பிராந்திய செயலாளர் கலென்பிதுனுவெவ சுகாதார வைத்திய அதிகாரியிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

இதன்படி, நிர்வாக பொது சுகாதார பரிசோதகர் உள்ளிட்ட பொது சுகாதார பரிசோதகர்கள் நடத்திய சோதனையில், இந்த அரிசி கையிருப்பு மனித பாவனைக்கு தகுதியற்றது என உறுதி செய்யப்பட்டு, அரிசி கொண்டு வந்த லொறியின் சாரதி கைது செய்யப்பட்டு நீதிமன்றில் முற்படுத்தப்பட்டார்.

கைது செய்யப்பட்ட சாரதி நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டதன் பின்னர் இரண்டு இலட்சம் ரூபா பெறுமதியான பிணையில் விடுவிக்கப்பட்டதோடு, எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் (02) விசாரணையை மீண்டும் அழைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Post a Comment

Previous Post Next Post

5

5

5

Girl in a jacket Girl in a jacket

5

5

HTML tutorial