விசேட வைத்தியர்களின் கடுமையான பற்றாக்குறையால் பல வைத்தியசாலைகளில் சத்திரசிகிச்சை உள்ளிட்ட பல்வேறு சிகிச்சைகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலை அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
நாடு முழுவதிலும் உள்ள வைத்தியசாலைகளில் சுமார் இரண்டாயிரம் விசேட வைத்தியர்களின் பற்றாக்குறை நிலவுவதாக சுகாதார அமைச்சு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
சுகாதார சேவைக்காக அங்கீகரிக்கப்பட்ட விசேட வைத்தியர்களின் எண்ணிக்கை நான்காயிரம் எனவும், தற்போது 2150 விசேட வைத்தியர்கள் மாத்திரமே இருப்பதாகவும் அந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
Post a Comment