இலங்கையில் அதிபர் தேர்தல் நடைபெறும் தேதி அறிவிப்பு.. எப்போது தெரியுமா? முழு விவரம்!
கொழும்பு: இலங்கையில் தற்போதைய அதிபரின் பதவிக்காலம் விரைவில் முடிவடையை உள்ள நிலையில், அதிபர் தேர்தல் நடைபெறும் தேர்தல் தேதியை அந்நாட்டு தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.
இந்தியாவின் அண்டை நாடுகளில் ஒன்று இலங்கை. வங்காள விரிகுடாவில் அமைந்துள்ள தீவு நாடான இலங்கையில் தற்போது அதிபராக ரனில் விக்ரமசிங்கே அதிபராக உள்ளார். ராஜபக்சே சகோதார்களின் கட்டுப்பாட்டில் இருந்த இலங்கையில் கடந்த 2022- ஆம் ஆண்டு வரலாறு காணாத நெருக்கடி ஏற்பட்டது.
இதனால், நாடு முழுவதும் வெகுண்டெழுந்த மக்கள், அதிபர் இல்லத்திற்குள் புகுந்தனர். இலங்கை முழுவதும் போராட்டம் வெடித்ததால், அதிபர் கோத்தபய பராஜபக்சே நாட்டை விட்டு வெளியேறினார். மஹிந்தா ராஜபக்சேவும் தனது பதவியை ராஜினாமா செய்தார். இலங்கையில் ஏர்பட்ட வரலாறு காணாத போராட்டத்தையடுத்து, கோத்தபய ராஜபக்சேவும் தனது அதிபர் பதவியில் இருந்து விலகினார். இதையடுத்து, அங்கு அதிபராக ரணில் விக்ரமசிங்கே தேர்வு செய்யப்பாட்டார். நாடாளுமன்ற வாக்கெடுப்பு மூலம் விக்ரமசிங்கே அதிபராக தேர்வு செய்யப்பட்டார். இலங்கையில் கடந்த 1993- ஆம் ஆண்டுக்கு பிறகு நாடாளுமன்ற மூலம் தேர்வு செய்யப்பட்ட முதல் அதிபர் விக்ரமசிங்கே தான் ஆவார். தற்போது அதிபராக இருக்கும் விக்ரமசிங்கேவின் பதவிக்காலம் முடிவடைய உள்ளது. இதையடுத்து புதிய அதிபரை தேர்வு செய்ய இந்த ஆண்டு இலங்கையில் தேர்தல் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இந்த நிலையில், இலங்கையில் அதிபர் தேர்தல் எப்போது நடைபெறும் என்ற விவரத்தை அந்த நாட்டு தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதுதொடர்பாக இலங்கை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளதாவது:-