மிர்திகா பிருந்தாவனமாய் மாறும் கடலூர் ராகவேந்திரஸ்வாமி திருக்கோவில்
கடலூர், புதுப்பாளையத்தில் கடந்த 1971-ஆம் வருடம் பக்தர்களால் ஸ்தாபனம் செய்யப்பட்டு சுமார் 53 வருடங்களாக ஸ்ரீ ராகவேந்திர ஸ்வாமிகள் ப்ருந்தாவனத்தில் இருந்து பக்தர்களுக்கு அனுக்ரஹம் செய்து வருகிறார். ப்ருந்தாவனத்தில் தொடர்ந்து தினமும் பூஜைகள், வருடந்தோறும் ஜெயந்தி மற்றும் ஆராதனை உற்சவங்கள் பக்தர்களின் சேவையால் வெகு விமர்சையாக நடைபெற்று வருகிறது. தற்சமயம் பூஜைகள் ஜகள் நடைபெற்று வரும் வரும் ஸ்வாமிகளின் ப்ருந்தாவனம் உள்ள இடமானது நிரந்தரமாக இல்லாத காரணத்தினால் கட்டிடத்துடன் கூடிய ஆலயம் அமைக்க முடியாத கால சூழ்நிலை இருந்து வருகிறது.
குருவிற்கு சொந்தமான மனை வாங்கி அதில் ப்ருந்தாவனம் அமைக்கப்பட வேண்டும் என்ற பக்தர்களின் நீண்ட நாள் ப்ரார்த்தனையானது, குருவின் க்ருபையால் கடலூர், ஆனைக்குப்பம், மாருதி நகரில் (அருள்மிகு வரசித்தி விநாயகர் திருக்கோவில்) அருகில் சொந்த மனையானது ப்ருந்தாவனம் அமைக்கும் பணிக்காக கிரயம் பெற்று கடந்த 2023-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 7-ம் தேதி பத்திரப்பதிவானது நடைபெற்றது. குருவின் க்ருபையால் பக்த ஜன சேவா டிரஸ்ட் மற்றும் திருப்பணி குழுவினர், பக்தர்கள் செய்வதற்கான பூமி பூஜை வைபவம் ஆகம முறைப்படி நடைபெற்றது. தற்போது ப்ருந்தாவனம் கட்டிடப் பணி ஆரம்பிக்க பட்டு நடைபெற்று கொண்டு உள்ளது.அதற்கு தேவையான செங்கல், மணல், சிமெண்ட் மற்றும் இரும்பு கம்பிகள் உள்ளிட்ட பொருட்கள் வாங்க வேண்டி ப்ருந்தாவன ஆலய கட்டுமான பணிக்கு ஒரு சதுரடிக்கு ரூ.2500/- ( இரண்டாயிரத்து ஐநூறு ரூபாய்) உத்தேசமாக என்று கணக்கிடப்பட்டுள்ளது.
குரு சேவை என்பது ஏதோ இந்த பிறப்பில் அன்றாடம் நடக்கும் செயல் போல நிகழ்வது அல்ல - பல ஜென்ம தேடல் மற்றும் பூர்வ புண்ணிய பலத்தால் மட்டுமே இந்த வாய்க்கும்.
இந்த ஆலய கட்டுமான பணி முழுவதும் பக்தர்களின் நன்கொடையுடனும்,ஆதரவுடனும், நம்பிக்கை மிகுந்த ப்ரார்த்தனையுடனும் அமைக்கப்பட உள்ளது. இந்த திருப்பணி சேவையில் பக்தர்கள் அனைவரும் பங்கு கொண்டு தங்களால் இயன்ற பொருளுதவி செய்து, இந்த புனித கைங்கர்யத்தின் மூலம் குருவின் அருளை பெற்றிடுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
பக்தர்கள் தங்களின் நன்கொடைகள் மற்றும் வரவு காசோலைகள் ஆகியவற்றை ட்ரஸ்டின் வங்கிக் கணக்கிற்கு நேரடியாகவும் அனுப்பலாம். இச்சேவையில் ஈடுபடும்