இந்திய நாடாளுமன்றத்தின் உறுப்பினர்களின் அமைவிடமான லோக் சபையில் பெரும்பான்மை பலத்தை மீண்டும் அந்நாட்டு பிரதமர் நரேந்திர மோடியின் கட்சியான பாரதீய ஜனதா கட்சி தலைமை வகிக்கும் தேசிய சுந்தந்திர முன்னணி பெற்றுள்ளது.
இந்திய பொதுத்தேர்தலில் லோக் சபையின் மொத்த ஆசன எண்னிக்கை 543 ஆக உள்ளது. இதில் 272 இடங்களை எடுத்தால் பெரும்பான்மை மூலம் அந்நாட்டில் ஆட்சி அமைக்க முடியும். ஆனால் பாராதீய ஜனதா கட்சி தலைமையிலான கூட்டமைப்பு இதுவரை 299 இடங்களை பெற்றுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்தியாவின் பிரதான எதிர்க்கட்சியான காங்கிரஸ் கட்சி தலைமையிலான இந்திய கூட்டமைப்பு இதுவரை 213 இடங்களை பெற்றுள்ளது.
எவ்வாராயினும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் திட்டங்கள் மற்றும் இலக்கின் படி 400 இடங்களை நாங்கள் பிடிப்போம் என்று கூறியிருந்தார். ஆனால் அவருடைய கனவுகள் இப்பொழுது தவிடுபொடியாகியுள்ளன.
Post a Comment