மடு பிரதேச செயலாளர் பகுதியில் உள்ள இரண்டாம் கட்டைப் பகுதியில் இன்று அதிகாலை இடம் பெற்ற விபத்தில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதுடன் மற்றுமொரு நபர் காயங்களுடன் முருங்கன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
குறித்த விபத்து தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,
மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவர் மடு ஜோதிநகர் இரண்டாம் கட்டை பாலத்தின் அருகில் விபத்துக்குள்ளாகியதில் 35 வயதுடைய நபர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
உயிரிழந்தவர் - மன்னார் பெரியகமம் பிரதேசத்தில் வசித்து வரும் இளம் குடும்பஸ்தர் என தெரிய வருகிறது.
காயமடைந்தவர் முருங்கன் வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டு அங்கிருந்து மேலதிக சிகிச்சைக்காக மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
காயமடைந்த நபர் பண்டிவிரிச்சான் பகுதியை சேர்ந்தவர் என விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
Post a Comment