வியாஸ்காந்த் தனது கிரிக்கெட் பயணத்தில் இன்னும் பல சாதனைகளை நிலைநாட்ட வேண்டும் என்று வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் வாழ்த்து

 





வியாஸ்காந்த் தனது கிரிக்கெட் பயணத்தில் இன்னும் பல சாதனைகளை நிலைநாட்ட வேண்டும் என்று வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:-

"இந்தியன் ப்ரீமியர் லீக்  கிரிக்கெட் சுற்றுப் போட்டியில் சன் ரைசஸ் ஹைதரபாத் அணிக்காக விளையாடியுள்ள யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த துடுப்பாட்ட வீரர் விஜயகாந்த் வியாஸ்காந்துக்கு வடக்கு மாகாணம் சார்பில் வாழ்த்துக்களைத் தெரிவிப்பதில் பெருமகிழ்ச்சி அடைகின்றேன்.

வடக்கு மாகாணத்திலிருந்து தனது கிரிக்கெட் பயிற்சியை பெற்ற இவர் இலங்கைக்குப் பெருமிதத்தைப் பெற்றுக்கொடுத்துள்ளதுடன், யாழ். மண்ணுக்கும் பெருமை சேர்த்துள்ளார்.

பல்வேறுபட்ட சமூகச் சீர்கேடான செயற்பாடுகளில் கவனம் செலுத்தும் இளைய தலைமுறையினருக்கு விளையாட்டின் மூலம் சாதனை படைக்கும் 22 வயதேயான வியாஸ்காந்த் ஒரு சிறந்த முன்னுதாரணமாவர்.

இவரை முன்மாதிரியாகக் கொண்டு எமது இளைஞர், யுவதிகள் விளையாட்டுக்களிலும் ஆர்வம் காட்ட வேண்டும் என்பதே எமது எதிர்பார்ப்பு.

Post a Comment

Previous Post Next Post

5

5

5

Girl in a jacket Girl in a jacket

5

5

HTML tutorial