சில மாதங்களுக்கு முன் வெளியாகி பெரிய ஹிட் ஆன மஞ்சுமெல் பாய்ஸ் படத்தில் குணா படத்தின் 'கண்மணி அன்போடு' பாடல் இடம்பெற்று இருந்தது.
அந்த பாடலை தன் அனுமதி இன்றி பயன்படுத்தியதாக இளையராஜா மஞ்சுமெல் பாய்ஸ் படத்தின் தயாரிப்பாளருக்கு நோட்டீஸ் அனுப்பி இருந்தார். அந்த பாடலுக்கு நான் தான் உரிமையாளர், என்னிடம் தான் அனுமதி வாங்க வேண்டும் என நோட்டீஸில் குறிப்பிட்டு இருக்கிறார்.
இந்நிலையில் மஞ்சுமெல் பாய்ஸ் படத்தின் தயாரிப்பாளர் ஷான் ஆண்டனி இளையராஜா விவகாரம் பற்றி பேட்டியில் பதில் கொடுத்து இருக்கிறார்.
"இரண்டு நிறுவனங்களிடம் முறையாக அனுமதி வாங்கி தான் அந்த பாடலை பயன்படுத்தினோம். தெலுங்கு உரிமை ஒரு நிறுவனத்திடமும், மற்ற மொழி உரிமைகள் இன்னொரு நிறுவனத்திடமும் இருந்தது. பிரமிட் மற்றும் ஸ்ரீதேவி சவுண்ட்ஸ் ஆகிய நிறுவனங்களிடம் அனுமதி பெற்று இருக்கிறோம்" என அவர் கூறி இருக்கிறார்.
Post a Comment