யாழ்ப்பாணத்திற்கான விஜயம் ஒன்றை மேற்கொண்டுள்ள இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங் கடந்த சில தினங்களாக பல்வேறுபட்ட தரப்பினரை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
அந்தவகையில் இன்று யாழ்ப்பாணத்திலும் பல நிகழ்வுகளில் பங்கேற்றிருந்தார்.
குறிப்பாக யாழ்ப்பாணம் கைதடியில் அமைந்துள்ள பனை அபிவிருத்திச் சபையின் தலைமை காரியாலயத்திற்கு நேரில் சென்ற இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங் அதனை பார்வையிட்டிருந்த அதேவேளை பனை உற்பத்தி பொருட்களையும் ஆராய்ந்திருந்தார்.
பனை அபிவிருத்திச் சபையின் சபையினுடைய தலைவர் கிருஷ்ணராஜா பத்திராஜா, உத்தியோகத்தர்கள், சிரேஷ்ட பொலிஸ் அத்தியாட்சகர் தனபால உட்பட பலர் கலந்து கொண்டனர்.
இதன்போது பனை அபிவிருத்திச் சபையின் சபையினுடைய உற்பத்திகள் தொடர்பான கருத்தரங்கு ஒன்றும் இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment