இந்தியாவில் பல்வேறு முன்னணி நிறுவனங்களும் மசாலா பொருட்களை உற்பத்தி செய்து, சர்வதேச நாடுகளுக்கு ஏற்றுமதி செய்து வருகின்றனர்.
இந்நிலையில் இந்தியாவில் உற்பத்தி செய்யப்பட்ட MDH நிறுவனத்தின் 3 வகை மசாலா பாக்கெட்டுகள் மற்றும் எவரெஸ்ட் நிறுவனத்தின் மீன் மசாலா பாக்கெட்டுகளின் விற்பனைக்கு, ஹாங்காங் அரசு தடை விதித்துள்ளது.
இந்த மசாலா பாக்கெட்டுகளில் எத்திலீன் ஆக்ஸைடு எனும் புற்றுநோய் ஏற்படுத்தும் நச்சுப்பொருள் கலந்திருப்பதாக என ஹாங்காங் உணவு பொருள் ஒழுங்குமுறை ஆணையம் தெரிவித்துள்ளது.
எனவே MDH-இன் Curry Powder, Sambhar Masala, Mixed Masala Powder மற்றும் எவரெஸ்ட்-இன் Fish Curry Masala பாக்கெட்டுகளை சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் திரும்பி பெற்றுக் கொள்ள வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளனர்.
Post a Comment