பொலிஸ்மா அதிபரின் பணிப்புரைக்கு அமைவாக நாடளாவிய ரீதியில் மேற்கொள்ளப்பட்டு வரும் 'யுக்திய' தேடுதல் நடவடிக்கையின் கீழ் குற்றப்புலனாய்வு பிரிவு கீழ் பணிக்கப்பட்ட விசாரணைக்கு அமைவாக சட்ட விரோத சொத்துக்கள் விசாரணை பிரிவினால் முன்னெடுக்கப்பட்ட விசாரணையின் அடிப்படையில், சந்தேக நபர் ஒருவரின் 9 கோடியே 30 லட்சம் பெறுமதியான சொத்துக்கள் இன்றைய தினம்(02) முடக்கப்பட்டுள்ளது
மன்னார் தலைமன்னார் பகுதியை சேர்ந்த 43 வயதான சந்தேக நபர் ஒருவருக்கு சொந்தமான இரண்டு வீடுகள், சொகுசு வாகனம் உள்ளடங்களாக 9 கோடியே 30 இலட்சம் ரூபா பெறுமதியான சொத்துக்களே மேற்படி நீதிமன்ற அனுமதியுடன் முடக்கப்பட்டுள்ளது.
Post a Comment